logo
home ஆன்மீகம் செப்டம்பர் 23, 2018
ஒவ்வொரு ராசிக்கும் உரிய சிவஸ்தலங்கள்
article image

நிறம்

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் ஒன்று மகாசிவராத்திரி. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் லிங்கத் தில் அருள்பாலிக்கத் தொடங்கியதும், பிரம்மா, விஷ்ணு இருவரும் சிவபெருமானின் அடிமுடி தேடியதும், தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப் பட்ட ஆலகால விஷத்தை அருந்தி சிவபெருமான் உல கைக் காப்பாற்றியதும் இந்த நாளில்தான். மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவேண்டும். எந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளைப் பெறலாம் என்பதைக் காண் போம்: மேஷம் மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடு வது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம். ரிஷபம் திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென் றும் பூஜைப்பொருட்களுடன் தயிர் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். மிதுனம் திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வர லாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். கடகம் திருக்கடையூர், திருவானைக்காவல், வேலு}ர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் சர்க்கரைக் கலந்த பால் வைத்துப் படைத்து வணங்கலாம். சிம்மம் சிதம்பரம், திருவண் ணாமலை சென்று வழிபட லாம். அருகிலுள்ள சிவால யத்துக்குச் சென்றும் சிவப் புச் சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். கன்னி காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம். துலாம் சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலாபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும். விருச்சிகம் திருவானைக்காவல், வேலு}ர் ஜலகண்டேஸ் வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். தனுசு திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது. மகரம் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம். கும்பம் சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவதலங் களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும். மீனம் வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். உங்களுக்கு அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலில் குங்குமப்பூ கலந்து அபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.