logo
home பலன்கள் பிப்ரவரி 28, 2023
மேஷம் முதல் மீனம் வரை / 2023 மார்ச் மாத பலன்கள்
article image

நிறம்

மேஷம்: 

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம்) 

தைரியம் உற்சாகம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். தன வரவு, நிதிநிலை சீராக இருக்கும். சில சுபவிரைய செலவுகள், வண்டி, வாகன வழியில் சிலருக்கு செலவுகள் உண்டாகலாம். பொன், வெள்ளி ஆபரணங்கள் வாங்க வாய்ப்புகள் கூடிவரும். வீண் பணவிரயங்களை தவிர்க்க நீண்டகால முதலீடுகள் செய்யவும். இளைய சகோதர வழியில் ஆதரவு, அனுகூலம் உண்டாகும். தாய்மாமன் வழி உறவுகளை சந்திப்பீர்கள். வெளிநாடு, வெளியூரில் வேலைதேடிவருபவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். சீருடை பணியாளர்கள் சிறப்படைவர். தகவல் தொடர்பு, கம்யூனிகேஷன்  சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தொடர்புடையவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும். தந்தையாரின் பூர்வீக விவகாரங்கள், அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நன்மையளிக்கும். நீண்டகால சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் முடிவுக்கு வரும். குடும்ப உறவுகளிடையே அனுகூலமான போக்கு நீடிக்கும். தாயார்வழி ஆதரவு தடைபடும்.

வழிபட வேண்டிய தெய்வம்:  

விநாயகர்

பரிகாரம்:  

வெள்ளிக்கிழமைகளில் ராகு காலபூஜை. - 

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 மார்ச் 12 முதல் 14 ஆம் தேதி மதியம் வரை.

 

ரிஷபம்:

(கிருத்திகை 2, 3, 4 பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்) 

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மறைமுக உடல் உபாதைகள் சரியாகும். ஏற்கனவே ஏற்பட்டுள்ள கடன்களை அடைப்பதில் சிலருக்கு தடங்கல்கள் உண்டாகலாம். புதிய கடன்களை தவிர்ப்பது நல்லது. மாத இறுதியில் நிலவரம் சீராகும். சில ஆடம்பர, நவநாகரீக தேவைகள் பூர்த்தியாகும் நேரமிது. பேச்சில் கடுமையை தவிர்த்து நிதானமாக செயல்படவும். துணையின் வழியில் சிலருக்கு சிறு மருத்துவ செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகள் எதிர்கால தேவைகளுக்காக சில துணிச்சலான முடிவுகளை மேற்கொள்வீர்கள். துணை பணிக்கு செல்பவராயின் ஆதாயம், இடமாற்றம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். அரசு பணியாளர்கள் ஆதாயம் காண்பர். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், தந்தையின் மூலம் ஆதாயம் அனுகூலங்கள் உண்டாகும். பூர்வீக விவகாரங்கள் சாதகமாகும். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடும் இளைஞர், இளைஞிகள் வேலை கிடைக்கப்பெறுவர். கணினி, பொறியியல், பத்திரிக்கை துறையினர் மேன்மை அடைவர்.

 

வழிபட வேண்டிய தெய்வம்: 

ஸ்ரீ துர்க்கை அம்மன் 

பரிகாரம்:   

காலபைரவ அஷ்டக பாராயணம். 

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 மார்ச் 14 மதியம் முதல் 16 ஆம் தேதி வரை.

 

மிதுனம்:

(மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) 

மனநிம்மதி உண்டாகும். தைரியம் கூடும். தொழில், பணி நிலை சீராக இருக்கும். ஆன்மீக, தர்மகாரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நீண்டகால பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெரியோரின் ஆசிகள், குலதெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். சிறுதூர பயணங்கள் உண்டு. சுகசௌகரிய செலவுகள் உண்டாகும். தந்தைவழி உறவுகள் மூலம் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். அரசு, நிலம், மனை சார்ந்த காரியங்கள் ஆதாயம் அளிக்கும். வேலை தேடுபவர்களுக்கு உரியவேலை கிடைக்கும். நிதி, நிர்வாகம், மேலாண்மை போன்ற துறைகளை சார்ந்தோர் உயர்வு அடைவர். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் காணப்படும். மூத்த சகோதரி குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தாயாருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் வந்து போகும். துணைவரின் உதவியால் வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும். மாத இறுதியில் மறைமுக எதிரிகளின் தொல்லைகளை தவிர்க்க பொறுமை காக்கவும்.

 

வழிபட வேண்டிய தெய்வம்: 

சுப்பிரமணியர்

பரிகாரம்: 

ஸ்கந்த சஷ்டி கவச பாராயணம்.  

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 மார்ச் 17 முதல் 19 ஆம் தேதி மதியம் வரை.

 

கடகம்:

 (புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய) 

சுறுசுறுப்பு, தைரியம் கூடும். நீண்டகால திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். தொழில், பணியாளர்கள் நிலை சிறப்படையும். குடும்பத்தில் சிறுசிறு மனஸ்தனங்கள் வந்து போகலாம். பேச்சில் பொறுமையை கடைபிடிக்கவும். குழந்தைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை பெறுவர். படிப்பிலும் கவனம் செலுத்தவேண்டும். தனவரவுக்கு குறைவிருக்காது. ஆபரண, நவநாகரீக பொருட்களின் சேர்க்கை உண்டு. மாத ஆரம்பத்தில் பணியிடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். மாத பிற்பகுதியில் வேலைக்கு செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். உல்லாச, சுற்றுலா அல்லது புனித யாத்திரை பயணங்கள் சிலருக்கு உண்டாகும். பழைய வீடு, வாகனம் சிலர் வாங்குவார்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தை வழி ஆதரவு. அரசு சம்பந்தப்பட்ட பணிகள் அனுகூலமாகும். மாத ஆரம்பத்தில் பணியிடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். 

வழிபட வேண்டிய தெய்வம்: 

மஹாவிஷ்ணு 

பரிகாரம்:  

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம். 

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 மார்ச் 19 மதியம் முதல் 21 ஆம் தேதி மதியம் வரை.

 

சிம்மம்:

(மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்) 

ஆரோக்கியம், உடல் நிலை சீராகும். நீண்டகால ஆரோக்கிய குறைபாடுகள் நிவர்த்தியாகும். ஆட்சி, அதிகார பணிகளின் இருக்கும் சிம்மராசிக்காரர்களின் நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். பணியாளர், தொழிலாளர்கள் நிலை மேன்மையடையும். சீருடை பணியாளர்கள் வேண்டிய பண, பதவி உயர்வுகள் மாத இறுதியில் கிடைக்கப்பெறுவர். வியாபாரிகள் தொழில் சம்பந்தப்பட்ட சிறு இழப்புகளை சந்திக்கலாம். அதிக அளவிலான கடன் விற்பனைகளை தவிர்க்கவும். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான நேரம் கூடிவரும். பூர்வீக விவகாரங்கள் ஆதாயம் அளிக்கும். தாய், தாய்வழி உறவுகளால் இலாபம் உண்டாகும். எதிர்பாராத தன வரவு சிலருக்கு உண்டு. மூத்த சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். இளைய சகோதரத்தை அனுசரித்து செல்லவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் நீடிக்கும். மாத இறுதியில் தந்தைக்கு சிறு உடல் உபாதைகள் வந்து போகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: 

ஆஞ்சநேயர் வழிபாடு; 

பரிகாரம்:  

ஹனுமான் சாலிசா பாராயணம்.  

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 மார்ச் 21 மதியம் முதல் 23 ஆம் தேதி வரை.

 

கன்னி:

(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் )  

குழப்பம், பதட்டம் போன்ற சூழ்நிலை மாத தொடக்கத்தில் இருக்கும். இரண்டாவது வாரத்திற்கு பிறகு சூழ்நிலை சாதகமாகும். தந்தையில் ஆரோக்கியத்தில் மாத இறுதியில் முன்னேற்றம் உண்டாகும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். பணிக்கு செல்பவர்களுக்கு மேலதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் இருப்பீர்கள். கவனமாக செயல்பட்டால் நற்பெயர் கிடைக்கும். தனவரவும், குடும்ப நிலையும் சிறப்பாக இருக்கும். தர்மகாரியங்களுக்கு செலவு செய்வீர்கள். பெண் தெய்வத்தை குல தெய்வம், இஷ்ட தெய்வமாக கொண்டவர்கள் கோயில் சென்று வழிபட்டு வருவீர்கள். இனளய சகோதரியின் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் சிலருக்கு தடை, தாமதங்கள் உண்டாகலாம். விக்னேஸ்வரர் வழிபாடு பலனளிக்கும். தொழிலாளர்கள், சீருடை பணியாளர்கள் மாத இறுதியில் சில அசௌகரியமான சூழ்நிலைகளை சந்திக்கலாம். பொறுமையாக செயல்படுவது அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: 

விக்னேஸ்வரர்: 

பரிகாரம்:  

விக்னேஸ்வர தியானம் 

சந்திராஷ்டம தினங்கள்:

2023 மார்ச் 24 மதியம் முதல் 25 ஆம் தேதி வரை.

 

துலாம்:

(சித்திரை 3, 4 பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் )  

விருப்பங்கள், தேவைகள் நிறைவேறுவதில் தடை தாமங்கள் நீடிக்கும். புதிய திட்டங்களை சிறிது காலத்திற்கு தள்ளிப்போடுவது நல்லது. தொழில் மாற்றம், பணிமாற்றம் போன்ற முயற்சிகளையும் ஒரு ஆறு மாத காலத்திற்கு தவிர்க்கவும். சிலருக்கு நீண்டகால கடன்கள் உருவாகலாம் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கடன் வாங்கவும். குடும்ப உறவுகளுக்காக சில உதவிகள் செய்யவேண்டி வரும்போது உங்கள் சக்திக்கு உகந்தவகையில் உதவிகள் செய்யவும், இதனால் எதிர்காலத்தில் தேவையற்ற சங்கடங்களை தவிர்க்க முடியும். சுப நிகழ்ச்சிகளுக்காக பயணங்கள் உண்டாகும். சுப விரையம்ன் உண்டு, தர்ம காரியங்களில் பங்கு கொள்வது தேவையற்ற செலவுகளை தவிர்க்க உதவும். பூர்வீக, சுக சௌகரிய விவகாரங்கள் நன்மையளிக்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம், போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். அரசு வழி காரியங்கள் ஆதாயம் அளிக்கும். நிர்வாக தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் மேன்மையடைவர்.

வழிபட வேண்டிய தெய்வம்: 

விநாயகர்,

பரிகாரம்:  

ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவசம் பாராயணம். 

சந்திராஷ்டம தினங்கள்:

2023 மார்ச் 26 மதியம் முதல் 28 ஆம் தேதி மதியம் வரை.

 

விருச்சிகம்:

(விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை முடிய) 

மாத தொடக்கத்தில் சுறுசுறுப்பு உற்சாகமாக காணப்படுவீர்கள். ஆரோக்கியம் சிறக்கும், நீண்டகால ஆசைகள் பூர்த்தியாகும். நிம்மதி உண்டாகும். தொழில், குடும்ப அபிவிருத்திக்கான பணிகள் மாத பிற்பகுதியில் சிறப்படையும். பொறியியல், இயந்திரம், கனரக வாகன தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்றம் அடைவர். அரசு, போட்டி தேர்வுகளில் வெற்றி கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு உரிய வேலை கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் ஏற்றம் உண்டு. மேற்படிப்புக்கான வாய்ப்புகள் உண்டாகும். தாயார்வழி ஆதரவு உண்டு. தாயாருக்கு சில உஷ்ண சமன்பந்தப்பட்ட உபாதைகள் தோன்றி மாத இறுதியில் சுகமடையும். பூமி, வீடு வாங்கும் அமைப்பு சிலருக்கு உருவாகும். நீண்டகால வைப்புநிதிகள் முதிர்ச்சியடைந்து கைக்கு வரும். அக்கா, தங்கை வழியில் சில சுப செலவுகள் உண்டாகும். துணைவர் பணிபுரிபவராயின் ஆதாயம் உண்டு. குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்:

லட்சுமி நரசிம்மர்; 

பரிகாரம்:

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம். 

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 மார்ச் 28 மதியம் முதல் 30 ஆம் தேதி மதியம் வரை.

 

தனுசு:

(மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்) 

சுகம், சௌகரியம், தைரியம் உற்சாகம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நீண்டகால திட்டங்களை செயல்படுத்த காலம் கைகூடும். இளையவர்களின் மூலம் ஆதாயம், நன்மைகள் உண்டாகும். தொழில் முறை பயணங்கள் உண்டாகும். இளைய சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் சிலருக்கு உண்டாகலாம். நிதி, தர்மஸ்தாபனம் போன்ற துறைகளை சேர்ந்தவர்கள் முன்னேற்றம் காண்பர். சுப விரையங்கள் உண்டாகும். பூர்வீக, தந்தைவழி உறவுகளின் மூலம் மாத பிற்பகுதியில் நன்மை உண்டாகும். பெண்களின் வகையில் சில எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சில நீண்டகால தேவைகள் பூர்த்தியாகும். துணைவரின் வழி பூர்வீக சொத்துகள், ஆதாயங்கள் சிலருக்கு அமையும். பிள்ளைகள் கவனமாக படிக்க வேண்டிய காலம். கோவத்தை கட்டுப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சிலர் வீடுகளில் பெற்றோர் தற்காலிகமாக பிரிந்து இருக்க நேரலாம். நண்பர்களினால் சிலர் சங்கடங்களை சந்திக்க நேரலாம். யோசித்து செயல்படவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: 

ஸ்ரீ மஹாலக்ஷ்மி; 

பரிகாரம்:  

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம், துர்காஷ்டகம்.  

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 மார்ச் 3 மதியம் முதல் 5 ஆம் தேதி வரை.

 

மகரம்:

(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்)

கடந்த மாத அலுவல் ரீதியான அலைச்சல்கள், தொந்தரவுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கப்பெறுவீர்கள். பதட்டம் தவிர்த்து குடும்ப மற்றும் தொழில் விவகாரங்களை கையாளுவீர்கள். நீண்டகாலமாக வரவேண்டிய பணம் உரிய நபர்களின் தலையீட்டால் கைக்குவரும். சிலருக்கு நாள்பட்ட உடல் உபாதிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். பழைய வண்டி, வாகனம் சிலர் வாங்குவர். பழைய வீட்டை வாங்கி சிலர் புதுப்பித்து காட்டுவார்கள்.  இன்ஸ்யூரன்ஸ், வைப்பு நிதி முதிர்வடைந்து கைக்கு கிடைக்கும். சிலருக்கு உயில் போன்றவற்றின் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். ஆன்மீக பயணங்கள் உண்டாகும். தனவரவு, வருமானம் சீராக இருக்கும். துணையின் வழி ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். வேலை தேடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு உரிய வேலை கிடைக்கும். திருமண வயதுடையோருக்கு வாய்ப்புகள் கூடிவரும். மாத இறுதியில் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: 

சுப்பிரமணியர் வழிபாடு: 

பரிகாரம்:  

ஸ்கந்த சஷ்டி கவச பாராயணம்.  

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 மார்ச் 5 மதியம் முதல் 7 ஆம் தேதி மதியம் வரை.

 

கும்பம்:

(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி, 1, 2, 3 பாதங்கள்) 

மாத தொடக்கத்தில் படபடப்பாக காணப்படுவீர்கள். நிதானமாக செயல்படுவதன் மூலம் அனாவசிய தொல்லைகளை தவிர்க்கலாம். மேலதிகாரிகள் மாத பிற்பகுதியில் ஆதரவாக செயல்படுவார்கள். பணியிடத்தில் சிலருக்கு அதிக முக்கியத்துவம், பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த தன வரவு உண்டு. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் விளையாட்டை குறைத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். துணைவழி குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அது தொடர்பான சுப விரையங்கள் உண்டாகும். தயார் வழியில் பொருளாதார உதவிகள் சிலருக்கு கிடைக்கும். அரசு ஊழியர்கள் ஆதாயம் அடைவர். கணினி, பத்திரிக்கை, மீடியா துறையினர் மிகுந்த அலைச்சலுக்கு உள்ளாகலாம். பொறியியல், சீருடை பணியாளர்கள், மருத்துவர்கள் முன்னேற்றம் காண்பர். தோள்பட்டை, கழுத்துவலி, கை வலி போன்ற உபாதைகளிருந்தவர்கள் சுகமடைவர். வரவு, செலவு சரியாக இருக்கும். உஷ்ண தொந்தரவுகள் சிலருக்கு வந்து போகும்.

வழிபட வேண்டிய தெய்வம்:

கால பைரவர் வழிபாடு:  

பரிகாரம்:  

கோளாறு திருப்பதிக பாராயணம்.

சந்திராஷ்டம தினங்கள்:

2023 மார்ச் 7 மதியம் முதல் 9 ஆம் தேதி மதியம் வரை.

 

மீனம்:

(பூரட்டாதி  4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) 

ஆரோக்கியம், உடல் நிலை சிறப்பாக இருக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் ஏற்படும். தனிமையை அதிகம் விரும்புவீர்கள். சித்தர் வழிபாடுகளில் நாட்டம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் நீண்டநாள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக விவகாரங்கள் சாதகமாகும். சகோதர உறவுகளிடையே சுமூகமாக போக்கு நிலவும். பிள்ளைகள் கல்வி சுற்றுலா, அல்லது மற்ற காரணங்களால் பயணங்கள் மேற்கொள்வார்கள். வெளிநாடு, வெளியூரில் வேலைதேடிவருபவர்களுக்கு உரிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. சிலருக்கு தேவையற்ற கடன்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளதால் யோசித்து செயல்படுவது நல்லது. மாத பிற்பகுதியில் மீடியா, பத்திரிக்கை, கணினி துறையினர் சிறப்படைவர். சீருடை பணியாளர்கள் ஊதிய, பதவி உயர்வு போன்ற நன்மைகள் அடைவர்.

வழிபட வேண்டிய தெய்வம்: 

ஸ்ரீ மகா விஷ்ணு வழிபாடு; 

பரிகாரம்: 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம்.

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 மார்ச் 9 மதியம் முதல் 11 ஆம் தேதி வரை.



குறிப்பு:

ஒருவரது தசாபுக்தியே 65-75% வரையிலும், கோட்சாரம் 25-35% வரையும் பலனளிக்கும். எனவே, இவை பொதுப்பலன்கள் எனக்கொள்ள வேண்டும். ராசி, லக்கினம் இரண்டில் எது வலுவாக உள்ளதோ அதை பொறுத்தே பலன்கள் அமையும். பலன்களை ராசிப்படியும், லக்கினத்தையும் ராசியாக பாவித்தும் ஒப்பிட்டுப்பார்த்து நடைமுறையில் பொருந்தும் பலன்களை அறிந்து கொள்ளவும். 

ஜோதிட ஆலோசனைக்கு :- 

ஸ்ரீ வைத்தீஸ்வரன் அஸ்ட்ரோ  ரிசர்ச் சென்டர், கிருஷ்ணகிரி.

கி. கார்த்திகேயன்.

செல்: 7010909413.