logo
home மருத்துவம் மே 03, 2020
நோய்க்கு மருந்தை எடுத்துக்கொள்ளும்முன் தன்வந்திரியை நினைத்தால் நோய் நீங்கும்
article image

நிறம்

காசி மன்னருக்கு மகனாக பிறந்தார் காசியை ஆட்சி செய்து வந்த அரசருக்கு மகனாக பிறந்தார் அப்சா. அவருக்கு தன்வந்தரி என்று பெயர் வைத்தார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டு, அதில் பெரும் திறமைசாலியாக திகழ்ந்தார்.
முன்ஜென்மத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும்பொழுது அதில் இருந்து அமிர்தத்தை கொண்டுவந்தவர்தான் இந்த அப்சா, அமிர்தத்தில் ஒரு பங்கை தனக்கு தருமாறு விஷ்ணுவிடம் கேட்டார் அப்சா.
ஆனால் விஷ்ணு அப்சாவுக்கு அமிர்தம் தர மறுத்தார், அதற்கு பதில் அடுத்த பிறவியில் தேவர்களைவிட மதிப்புமிக்கவனாக, இந்த உலகத்தை காப்பவனாக நீ திகழ்வாய், என்று வரம் அளித்தார் மகாவிஷ்ணு.
இதனால் அவரிடம் அதிக சீடர்கள் சேர்ந் தார்கள். ஒருநாள் தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாயநாதரை தரிசிக்க கைலாயத் திற்கு சென்று கொண்டு இருந்தார்கள்.
இதை விரும்பாத தக்சன் என்ற நாகம், இவர்களை வழி மறைத்தது தன்னுடைய விஷத்தை அவர்களின் மேல் பொழிந்தது. உடனே தன்வந்தரியின் சீடர்கள் அந்த பாம்பை கொல்ல முயற்சித்தார்கள். இதை கண்ட வாசுகி என்ற பாம்பு, கோபம் கொண்டு அத்தனை சீடர்களையும் விஷ கிருமிகளைக் கொண்டு மயக்கம் அடைய செய்தது.
இதனால் சீடர்கள் உயிரற்ற உடல்போல் பூமியில் வீழ்ந்தார்கள். உடன் வந்த தன்வந்தரி, தன்னுடைய சீடர்களுக்கு ஆயுர்வேத மருந்தை கொடுத்து மயக்கத்தை தெளிய செய்தார். தன்வந்தரியின் செயலால் மேலும் கோபம் அடைந்த வாசுகி, தன்னுடைய சகோதரியான மானசதேவியை அழைத்து வந்து உயிர் பெற்ற அத்தனை சீடர்களையும் கொல்லும்படி உத்தரவிட்டார்.
மானசாதேவியும் தன்வந்திரியின் சீடர்களை, விஷ காற்றால் மயக்கம் அடைய செய்வதும், அதை தன்வந்தரி தன்னுடைய ஆயுர்வேத மருத்துவத்தால் மயக்கத்தை தெளிய வைப்பது மாக இருந்தார். இதனால் வாசுகியும், மானசதேவியும் தன்வந்திரியிடம் போராடி ஜெயிக்க முடியாமல் சோர்வடைந்தார்கள்.
“யார் நீ” என்று தன்வந்தரியை வாசுகி யும் மானசாதேவியும் விசா ரித்தார்கள். தன்வந்தரி முன் ஜென்மத்தில் அமுதத்தை எடுத்து வந்த அப்சா, மறுபிறவி யில் உலகை காக்கும் வகையில், விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர், அவர் தேவர்களைவிட மேலானவர் என்பதை தெரிந்துக் கொண்டு வாசுகியும், மானசாதேவியும் மரியாதையுடன் தன்வந்தரியை கைலாயத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
தேவர்கள் தன்வந்தரியின் மகிமையை தெரிந்துக்கொண்டு வணங்கினார்கள். தேவர் களுக்கும் ஆஸ்தான மருத்துவ ராக மாறினார் தன்வந்தரி.
அதனால் பூலோகவாசிகளின் வியாதிகள் தீர்க்க முதலில் தன்வந்தரியை வணங்கி மருந்து உட்கொண்டால் அவர்களின் நோய் நீங்கும். மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகள் தன்வந்தரி பகவானை வணங்கி வந்தால் அவர்களுக்கு இறை வனின் ஆசியால் யார் வழியி லாவது அவர்களுக்கு நோய் தீர மருந்து கிடைக்கும்.
எந்த நோயாயால் பாதிக்கப் பட்டவர்களும், எந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் முன் தன்வந்திரி பகவானை வேண்டிக் கொண்டால் நோய் எளிதில் தீரும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.