logo
home பலன்கள் செப்டம்பர் 02, 2016
வீட்டில் ஒற்றுமை இல்லையா? மன அமைதியில்லையா? வெண்கடுகையும் சாம்பிராணியையும் சேர்த்து தூபம் போடுங்கள்
article image

நிறம்

வீட்டில் புகுந்து கொள்ளும் தீய சக்திகளை விலக்குவது கடினம் அல்ல. ஆனால் வீட்டில் அமைதி இன்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான் என்பது மட்டும் சத்தியமான உண்மை. ஒற்றுமையாக இருந்து வந்த குடும்பங்கள் கூட சிறு சிறு பிரச்சனைகளினால் மன ஒற்றுமை இன்றி சிதறும் என்பதின் காரணம் அந்த தீய ஆவிகளின் செயல்பாடினால்தான் .
வெண்கடுகு எனும் வெண் கணங்களின் மத்தியில் பைரவர் ஆகவே அப்படிப்பட்ட தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன? அதைக் குறித்து சாயி உபாசகர் ஒருவர் கூறிய நிவாரணம் இது. ''மனதளவில் பிரிந்து உள்ள குடும்பங்கள் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவவும், வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் உள்ளது. 
வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும். அதில் சிறிதளவு வெள்ளைக் கடுகை ( வெண்கடுகு என்பார்கள்) போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட்டு வந்து ஸ்வாமி அறையில் வைத்து விட வேண்டும். அதன் பின் நடப்பதைப் பாருங்கள். வீட்டில் அந்நாள் வரை இருந்து வந்த மன அமைதி மெல்ல மெல்ல அதிகமாவதைக் காணலாம்.
வெண் கடுகிற்கு அத்தனை சக்தியா? அது எதனால்? அதன் காரணத்தைக் கேட்டபோது ஒரு பண்டிதர் கீழ் கண்ட காரணங்களைக் கூறினார். ''வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும். 
ஓரு அரசன் சிறப்பாக நாட்டை ஆண்டான், அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார். 
அதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார். 
எதற்காக பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகை பயன்படுத்த வேண்டும் என்று மன்னன் கேட்க ராஜ குரு கூறினார் ' மன்னா, வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார். ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும். என்றார்.
இவ்வளவு சக்தி வாய்ந்த வெண்கடுகை நீங்களும் உபயோகித்து பாருங்கள் அதன் அருமை சில நாட்களிலே நீங்கள் உணருவீர்கள்.
நன்றி - Baskaran Sankar


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                                            
www. aanmeegamalar.com 
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com