logo
home ஆன்மீகம் நவம்பர் 12, 2020
நான்கு யுகங்களாக கொண்டாடப்படும் தீபாவளி பித்ருதோஷம் சனிதோஷத்தை நீக்கும் எண்ணெய்க் குளியல்
article image

நிறம்

யுகங்களை கிருத யுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலி யுகம் என நான்கு வகையாக பிரித்துள்ளனர் நமது முன்னோர்கள், இதில் தீபாவளி என்பது மூன்றாவது யுகமானது துவாபர யுகத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. ஆனாலும் துவாபர யுகத்திற்கு முன்பே தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் 1வது யுகமான கிர்த யுகத்தில் உருவானது கந்த புராணம். அந்த கந்த புராணத்திலேயே, தீபாவளி என்பது முக்கிய விரதநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று சிவ பெருமானுக்கு உரிய அஷ்ட விரதங்களில் கேதார கெளரி விரதம் முக்கிய விரதநாள் என்று போற்றப்படுகிறது. கந்த புராணத்தின்படி 21 நாட்களுடன் சக்தியின் கேதார கெளரி விரதம் முடிவுற்றது. இந்த தினத்தில் தான் சிவபெருமான், சக்தியை தன்னில் ஒருபாதியாக ஏற்று, ‘அர்த்தநாரீசுவரர்’ என்ற உருவத்தை எடுத்தார். அதனை நம் முன்னோர் தீபங்களை ஏற்றியும், எரியும் பொருளைவைத்து விளையாடியும் கொண்டாடினர். இது அப்போதைய தீபாவளி பண்டிகையாக கொண்டாடியிருக்கின்றனர். அதன்படி, 3 வது யுகமான துவாபர யுகத்தில், மேற்கண்ட தினத்தில் தான் நரகாசுரனை கொல்ல கிருஷ்ணர் தேர்ந்தெடுத்த நாளாக கூறப்படுகிறது. பூமாதேவியின் மறு உருவமான, சத்தியபாமா கையால் இறக்க வேண்டும் என்ற விதிப்படி, நரகாசுரனை கொல்ல கிருஷ்ணரே தேரோட்டியாக செயல்பட்டு, விதி தன் கடமையைசெய்ய ஒருசிறு நாடகத்தினை நிகழ்த்தி, சத்தியபாமா கையால் நரகாசுரனை கொன்று, அவனுக்கு காட்சி கொடுத்து, அவன் இறந்த தினத்தில் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வைத்ததாக கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் நான்கு நான்கு யுகங்களிலும் தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் முருகன், சிவன், பார்வதி, பெருமாள் போன்ற அனைத்து கடவுளுக்கும் உகந்த நாளாகும், சைவம், கௌமாரம், சாக்தம், வைணவம் போன்ற அனைத்துப் பிரிவினரும், இந்த நான்கு யுகத்திலும் இந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். தீபாவளியன்று கங்கா ஸ்னான விதிமுறைகள் இந்துமத சாஸ்திரப்படி எந்த நாளாக இருந்தாலும் காலை 8.30 மணிக்கு முன்பும் மாலை 5.00 மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக்கூடாது ; ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் (தலையில் மட்டுமாவது) எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். இறந்தவர்கள் துக்க வீடு, இடுகாடு, சுடுகாட்டுக்கு சென்று வந்த தினத்தில் மற்றும் அமாவாசை தினத்தில் எண்ணெய், சோப்பு, சீயக்காய் தேய்த்து நீராடக்கூடாது. வெந்நீரிலும் நீராடக்கூடாது. மீறி இந்த நேரங்களில் இத்தகைய குளியல் செய்தால் பித்ருக்களின் சாபத்திற்குஆளாவோம். கங்கா ஸ்னானம்:- ஆனால் கிருஷ்ண பகவான் நரகாசுரனுக்கு கொடுத்த வரம் காரணமாக தீபாவளி தினத்தில் மட்டும் இதற்க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கங்காஸ்நானம் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது. தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது . தீபாவளிக்கு முன் தினம் சதுர்த்தி தினத்தில் தீபாவளி கொண்டாடுபவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் 3 மணியில் இருந்து 6 மணிக்குள் நல்ல எண்ணெயை தலையிலும் உடலிலும் தேய்த்து குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு பின்பு சீயக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்; நல்ல எண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வென்னீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெயைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் சரஸ்வதியும் வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. 6 மணிக்கு முன்பு குளிக்க குளிர்ந்த நீரை பயன்படுத்தக்கூடாது. 6 மணிக்கு பிறகு குளிப்பதாக இருந்தால் வெந்நீர் பயன்படுத்தக்கூடாது; வெந்நீருக்கு பதில் குளிர்ந்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அமாவாசை தினத்தில் தீபாவளி கொண்டாடுபவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் 3 மணியில் இருந்து 6 மணிக்குள் நல்ல எண்ணெயை தலையிலும் உடலிலும் தேய்த்து குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு பின்பு சீயக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்; நல்ல எண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வென்னீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெயைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் சரஸ்வதியும் வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம். தோஷம் நீங்கும் நண்லெண்ணை தேய்த்து குளிக்க தோஷங்கள் விலகும். சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரித்திரமும் நீங்கும். துஷ்ட சக்தியை விரட்டும். தீபாவளி திருநாள் அன்று காலையிலும், மாலையிலும் இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் நெய் விளக்கு ஏற்ற வேண்டும்; முடியாத பட்சம் ஒரு நெய் விளக்கு மட்டுமாவது ஏற்ற வேண்டும் இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும்.