logo
home பலன்கள் அக்டோபர் 18, 2018
ஐப்பசி மாத ராசி பலன் (மேஷம் முதல் கன்னி வரை)
article image

நிறம்

மேஷம்: எஜமானனைப் போல செயல்படுங்கள். அடிமை உணர்வை கைவிட்டு சுதந்திரமாக பணிபுரியுங்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மை படைத்திருக்கிறான். உயர்வான செயல்களைச் செய்தால் வாழ்க்கை பயனுடையதாகும்.உயர்வான சிந்த்னைகள் மூலம் உயர்வு பெரும் மாதம் இது.ஐப்பசி மாதத்தின் துவக்கத்தில் சற்று சிரமமான நிலையைக் காணும் நீங்கள் அக்டோபர் 27ம் தேதி முதல் சாதகமான பலன்களைக் காண உள்ளீர்கள். அஷ்டமத்துச் குருவின் நிலை தொடர்ந்து கொண்டிருப்பதால் எதிர்பாராத செலவினங்கள் கையிருப்பைக் கரைக்கும். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருந்து வருவதால் மன வருத்தம் உண்டாகும். என்னதான் உழைத்தாலும், என்னதான் சம்பாதித்தாலும் முழு திருப்தி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் மனதில் அதிகமாக இருந்து வரும். ராசிநாதன் செவ்வாய் அக்டோபர் 27ம் தேதியில் இருந்து 11ம் இடத்தில் லாப பலத்துடன் சஞ்சரிப்பதால் செயல் வேகம் கூடும். சரியான உதவியாளரைத் தேடி வருவீர்கள். ராசிநாதன் செவ்வாய் அமர்ந்திருப்பது சனி பகவானின் வீடு என்பதால் உங்களுக்குக் கீழ்படிந்த ஒரு நபர் இந்த மாதத்தில் உங்களுக்குக் கிடைப்பார். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து வருவீர்கள். குடும்பத்தில் அநாவசியமான பிரச்னைகள் தோன்றும். பேசும் வார்த்தைகளில் தத்துவ சிந்தனைகள் அதிகம் வெளிப்படும்.உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். வண்டி, வாகனங்களால் 14, 15 ஆகிய தேதிகளில் கூடுதல் செலவுகளுக்கு ஆளாக நேரிடலாம். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் ஆலோசனைகள் சரியான சமயத்தில் கைகொடுக்கும். மன உளைச்சலின் காரணமாக உடல்நிலையில் சிறிது சிரமத்தினைக் காண நேரிடும். வாழ்க்கைத்துணையுடன் வீண் வாக்குவாதத்தின் காரணமாக கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. உறவுமுறைப் பெண்களால் அதிக செலவுகளை சந்திப்பீர்கள். நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நண்பர்களால் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் காண்பீர்கள். கூட்டுத்தொழில் நல்ல லாபத்தினைத் தரும். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்திற்கு ஆளாவார்கள். கலைத்துறையினர் தடைகளைத் தாண்டி முயற்சிக்க வேண்டியிருக்கும். தேடுதல் நிறைந்த மாதம் இது. பரிகாரம்: சூரசம்ஹார நாள் அன்று சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் அன்னதானம் செய்யுங்கள். ரிஷபம்: கடவுள் கடல் போன்றவர். நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தால், அந்தக் கடலளவு சக்தியில் ஒரு துளியை மட்டுமே பயன்படுத்துகிறோம். அந்த ஒரு துளியை முழுமையாகப் பயன்படுத்தக் கூட, கடவுள் பற்றிய பூரண நம்பிக்கை இருந்தால் தான் முடியும்.நம்பிக்கையுடன் நடை போடும் மாதம் இது.ராசிநாதன் சுக்ரனின் ஆறாம் இடத்து சஞ்சார நிலையும்,சூரியனின் ஆறாம் இடத்து சஞ்சார நிலையும், ராசியின் மீது விழும் குருபகவானின் பார்வையும் உங்களுக்கு உயர்வினைத் தரும். எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உண்டானாலும் சரியான சந்தர்ப்பத்தில் சரியான நபர்கள் மூலமாக உதவி கிடைக்கக் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்து வரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சித்து வருவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். இந்த மாதத்தில் கடன்கொடுப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டியது அவசியம். பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு அதிகமாக வெளிப்படும். ஆயினும் அடுத்தவர்களை கேலி செய்யும் விதமாக வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பணிகளை விரைவாக செய்துமுடிக்க உதவி செய்யும்.வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதீத எச்சரிக்கை தேவை. முடிந்தவரை அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் தங்களின் கல்வி நிலையில் எதிர்பாராத இடைஞ்சலை சந்திக்கக் கூடும். கூட்டுப்பயிற்சி முறை மிகுந்த நன்மை தரும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய நேரிடும். நவம்பர் மாதத்தின் முற்பாதியில் தொற்று நோய்களால் அவதிப்படும் வாய்ப்பு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் வகையில் உணவுப் பழக்கத்தினை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்களின் செயல்வெற்றிக்குத் துணை நிற்கும். பங்கு வர்த்தகம், இன்சூரன்ஸ், ஃபைனான்ஸ் போன்ற நிதித்துறையைச் சேர்ந்தவர்கள் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். ஷேர் மார்க்கெட் துறையில் உள்ளவர்கள் ஓரளவு லாபம் கிடைத்தவுடன் வர்த்தகத்தை முடித்துக் கொள்வது நல்லது. பேராசை பெருநஷ்டத்தினைத் தந்துவிடும். கலைத்துறையினருக்கு அநாவசியக் கற்பனைகளால் நிம்மதியான உறக்கம் கெடலாம். மற்றபடி நற்பலன்களைக் காணும் மாதம் இது. பரிகாரம்: ஜூரஹரேஸ்வரரை வணங்கி வர ஆரோக்யம் சீராக இருக்கும். மிதுனம்: தான் என்னும் ஆணவத்தையும், பேராசையையும் அடக்கும் போது பெரும் வெற்றிகளைப் பெறமுடியும். அரும் பெரும் செயல்களைத் தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும். ஆனவத்தை உங்கள் கால் அடியில் போட்டு மிதிக்கும் மாதம் ஆன்மீகத்தை அறிந்து அறிஞ்சானாக வாழும் மாதம் இது.வாழ்க்கையில் ஏதாவது லட்சியம், கொள்கையில் பிடிப்பு வேண்டும். அந்த கொள்கை வழியில் நடந்தால் நம்முடைய இடர் பாடுகளின் அளவு குறைந்து விடும் அல்லது மட்டுப்பட்டு விடும்.உங்கள் கொள்கையின் மேல் கொண்ட லட்சியத்தில் பிடிப்பாக இருக்கும் மாதம் இது.ராசிநாதன் புதனின் ஐந்தாம் இடத்துச் சஞ்சார நிலை தொடர்வதால் எந்த ஒரு பணியையும் நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே செய்யத் துவங்குவீர்கள். அதே நேரத்தில் வீண் காலதாமதம் செய்யாது பருவத்தே பயிர் செய் என்ற பழமொழியை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். எளிதில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நற்பலன்கள் வந்து சேர்வதில் தடைகளை சந்திக்க நேரிடும். சிறிது போராட்டமான சூழலை உணர்ந்தாலும், இறங்கிய காரியங்களில் இழுபறியை சந்தித்தாலும் விடாமுயற்சியைக் கொண்டிருக்கும் நீங்கள் சிறிது காலதாமதமானாலும் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். இந்த மாதத்தில் பொருளாதார நிலை நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பேசும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடித்து வருவீர்கள். தைரிய ஸ்தானாதிபதி சூரியன் விடாமுயற்சிக்கு துணை நிற்பார். உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த நன்மை உண்டாகும்.தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் பணிகளுக்கு மற்றொரு கரமாக துணை நிற்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். உறவினர்களோடு ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். அவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. ஆறாம் இடத்தில் குரு உள்ளதால் பெண்களின் வழியில் வீண்வம்பு, வழக்குகள், அநாவசிய பிரச்னைகள் வந்து சேரும் நேரம் இது என்பதை கவனத்தில் கொள்ளவும். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடுவது கூடாது. வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் பயன்தரும் வகையில் அமையும். தொழில்முறையில் நேர்மையான செயல்பாடுகள் நற்பெயரைப் பெற்றுத் தரும். கலைத்துறையினர் போட்டியான சூழலைக் காண்பார்கள். விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டிய மாதம் இது. பரிகாரம்: பகவத்கீதையின் பொருளை உணர்ந்து படித்து வாருங்கள். கிருஷ்ண பகவானை வழிபட்டு வர கவலைகள் தீரும். கடகம்: இந்த மாதத்தில் நற்பலன்களைக் காண உள்ளீர்கள். எண்ணிய காரியங்களை செய்துமுடிக்க மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருவீர்கள். செயல்திறனில் அதிக சுறுசுறுப்புடன் காணப்பட்டாலும், மனதளவில் சிறிது குழப்பத்திற்கு ஆளாகி உள்ளதால் ஒரு சில இடைஞ்சல்களை சந்திப்பீர்கள். சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் இடத்தில் அமைந்திருக்கும் கிரகங்களின் இணைவு பல்வேறு குழப்பங்களை மனதில் தோற்றுவிக்கும். எந்த முறையை செயல்படுத்தி வெற்றி காண்பது என்பதில் தெளிவான முடிவெடுக்க இயலாத சூழல் உருவாகும். ஆயினும் இறங்கிய காரியத்தில் வெற்றி காண வேண்டும் என்ற முனைப்பு சதா மனதில் இருந்து வரும். பேசும் வார்த்தைகளில் சிறிது கறார்தன்மை வெளிப்படும். திறமையான செயல்பாடுகள் நற்பெயரைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை முன்னேற்றம் கண்டு வரும்.உடன்பிறந்தோருடன் இணைந்து நிலுவையில் இருந்து சொத்து பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் செயலிழந்து சற்று சிரமத்தினைத் தரக்கூடும். மாணவர்கள் பாடங்களில் தோன்றும் சந்தேகங்களுக்கு தயக்கமின்றி உடனுக்குடன் ஆசிரியரிடம் தெளிவு பெற வேண்டியது அவசியம். வண்டி, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் சுறுசுறுப்பான செயல்பாடுகளை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் செயல்வெற்றிக்குத் துணைபுரியும். ஆன்மிகப் பணிகளில் முன்நின்று செயல்பட வேண்டியிருக்கும். ஆன்மிகப் பணிகள், பொதுக்காரியங்கள் ஆகியவற்றில் முழுமையான மனதிருப்தியுடன் செயல்பட்டு வருவீர்கள். தொழில்முறையில் உண்டாகும் போட்டியினை அயராத உழைப்பின் மூலம் வெற்றி காண்பீர்கள். சாதகமான பலன்களைக் காணும் நேரம் இது. பரிகாரம்: யோகா, தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதால் மனநிம்மதி காண்பீர்கள். சிம்மம்: உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.உள்ளத்தை சுத்தம் படுத்தும் மாதம் இது.ராசிநாதன் சூரியனின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரமும், புத்திகாரகன் புதபகவான் ராசிநாதனோடு இணைவு பெற்றுள்ள நிலையும் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை குடிபுகச் செய்யும். செயல்வேகத்தோடு விவேகமும் இணையக் காண்பீர்கள். நினைத்த காரியங்களை எந்த ஒரு நிலையிலும் தள்ளிப் போடாமல் உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருவீர்கள். அதே நேரத்தில் அடுத்தவர்களோடு இணைந்து செய்யும் பணிகளில் உங்களின் பிடிவாதமான நிலையினை சற்று தளர்த்திக் கொள்வது நல்லது. பேச்சினில் நிதானத்தைக் கடைபிடித்தாலும் வார்த்தைகளில் வெளிப்படும் கேலியான கருத்துகள் அடுத்தவர் மனதினைப் புண்படுத்தக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலை நல்ல முன்னேற்றம் கண்டு வரும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் நேரத்தில் சற்று இடைஞ்சலாகவும், இரவு நேரத்தில் சாதகமாகவும் செயல்பட்டு வரும். வண்டி, வாகனங்களால் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் காண்பீர்கள். பிரயாணத்தின்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.அந்நிய மனிதர்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. உறவினர்களால் உண்டான கலகங்களுக்கு தீர்வு காண முற்படுவீர்கள். மாணவர்கள் தங்களின் தனித்திறமையின் மூலம் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறத் துவங்கும். பொதுக்காரியங்களில் உங்களின் ஆலோசனைகள் வெற்றியைத் தருவதோடு சிறப்பான நற்பெயரைப் பெற்றுத் தரும். வாழ்க்கைத்துணையோடு கொண்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களோடு இணைந்து செய்யும் பணிகளில் சற்று விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். கூட்டுத்தொழில் சிறப்பான லாபத்தினைத் தரும். கலைத்துறையினர் வெளியூர் நிகழ்ச்சிகளில் ஆதாயம் காண்பர். விவேகமான செயல்பாடுகளின் மூலம் வெற்றி காணும் மாதம் இது. பரிகாரம்: சனிதோறும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுங்கள். கன்னி: உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று உள்ள உடைமைகளையும் குறைக்கப் பாருங்கள். எளிய வாழ்க்கையில் தான் உயரிய சிந்தனைகள் உருவாகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.ஆடம்பர செலவில் தான் ஒருவருக்கு ஆனவம் பிடிக்கும்,தேவை இல்லாத செலவை குறைக்கும் மாத இது.இரண்டாம் வீட்டீல் இருக்கும் புதன் , சுக்கிரன் ,சூரியன் இந்த மாதத்தில் சுகமான சூழலை உண்டாக்கித் தருவார். அதே நேரத்தில் சாதகமான கிரக நிலையைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்கால நலன் கருதி கூடுதலாக உழைக்க வேண்டியது அவசியம். தன ஸ்தானமும், தைரிய ஸ்தானமும் வலிமை கொள்கிறது. தைரிய ஸ்தானத்தின் வலிமை உங்கள் செயல்வெற்றிக்குத் துணை நிற்கும். முக்கியமான காரியங்களில் இறங்கும்போது மனதின் மூலையில் சிறிது தயக்கம் இருந்து வந்தாலும் நடப்பது நடக்கட்டும் என்ற தைரியத்துடன் செயல்பட கிரக நிலை துணை நிற்கும். செயல்படாமல் சும்மா இருப்பதை விட வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது நல்லது என்ற எண்ணத்துடன் செயலில் இறங்கி விடுவீர்கள். பேசும் வார்த்தைகளில் உங்களையும் அறியாமல் சிறிது கடுமை வெளிப்படக்கூடும். குடும்பப் பிரச்னைகளில் உங்களின் கருத்துகள் முக்கியத்துவம் பெறும்.பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி, மாறி இருந்து வரும். முக்கியமான நேரத்தில் உடன்பிறந்தோரின் ஆலோசனைகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றுத் தரும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களின் பணிகளுக்கு மிகுந்த உதவியாய் அமையும். மாணவர்கள் ஞாபக மறதித் தொல்லையால் சற்று அவதிப்படுவார்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில் தனி ஆர்வம் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பணிகளில் சுணக்கத்தினை சந்திக்க நேரிடும். பெற்றோருடன் சிறிது கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். தொழில்முறையில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவர். நற்பலன்களைக் காணும் மாதம் இது. பரிகாரம்: வியாழன் தோறும் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து கொள்ளவும்.