logo
home பலன்கள் அக்டோபர் 18, 2018
ஐப்பசி மாத ராசி பலன் (துலாம் முதல் மீனம் வரை)
article image

நிறம்

துலாம் : மவுனமாக இருப்பது நல்லது. ஆனால், அதற்கு தேவையான மனஅடக்கம் நமக்கு இருப்பதில்லை. உண்மையை நாடுபவர்களுக்கு மவுனம் பெருந்துணையாகும். மவுனத்தால் மனதிலுள்ள தயக்கம் விலகி தெளிவான முடிவினை எட்டமுடியும் இந்த மாதம்.ராசிநாதன் சுக்கிரனின் 1ம் இடத்துச் சஞ்சாரம் இந்த மாதத்தில் தனலாபத்தைக் கூட்டும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் மிகுந்த வேகம் காட்டி வருவீர்கள். சுயகௌரவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் நீங்கள் உங்களைச் சார்ந்து இருப்பவர்களோடு அனுசரணையோடு நடந்து கொள்வது நல்லது. அக்டோபர் 26ம் தேதி வரை செவ்வாயின் உச்ச பலம் சாதகமான பலன்களைத் தோற்றுவிக்கும். வாக்கு ஸ்தானத்தின் வலிமை பேச்சுத்திறனை அதிகரிக்கச் செய்து செயல்வெற்றிக்குத் துணை புரியும். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசி வெற்றி கண்டு வருவீர்கள். உங்களின் பேச்சு சாதுர்யம் சிறப்பான தனலாபத்தினைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி, மாறி இருந்து வரும். பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் குறிப்பிடத்தகுந்த நன்மையை அடைவீர்கள்.பிரயாணத்தின்போது உண்டாகும் சந்திப்புகள் உங்களின் நட்பு வட்டத்தினை விரிவடையச் செய்யும். ஞாபக மறதியின் காரணமாக மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சற்று சிரமத்தினைக் கண்டு வருவார்கள். உறவினர்களால் கூடுதல் செலவுகளுக்கு ஆளாக நேரிடும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக அமையக்கூடும். முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி பிரச்னைகளால் உடல்நிலையில் சிரமங்கள் உண்டாகலாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். சுயதொழில் செய்வோர் முற்பாதியில் உழைத்து பிற்பாதியில் லாபத்தினைக் காண்பர். கலைத்துறையினர் தங்கள் திறமையினை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். நற்பலன்களைக் காணும் மாதம் இது. பரிகாரம்: தீபாவளி நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்வதால் மனதில் மகிழ்ச்சி நிறையக் காண்பீர்கள்.
விருச்சிகம்: உங்களை உலகம் தூற்றினாலும், கொண்ட லட்சியத்திலிருந்து விலகாமல் உறுதியுடன் செயல்படுங்கள். நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்.தூற்றினால் தான் பல தூரம் வரை உங்கள் வெற்றிகள் அனைவருக்கும் தெரியும்.துக்கத்தை தூசி தட்டி எரியும் மாதம் இது.ராசிநாதன் செவ்வாயின் அமர்வு நிலை உங்களுக்கு சிறப்பான நற்பலன்களை ஏற்படுத்தித்தரும் வகையில் அமைந்துள்ளது. அயராத உழைப்பின் காரணமாக செயலில் வெற்றி கண்டு வருவீர்கள். வெற்றியைத் தரும் 11ம் இடத்தின் அதிபதி புதன் 12ல் அமர்ந்திருப்பது கூடுதல் அலைச்சலைத் தரும். ஆயினும் ராசியில் குரு இணைவினால் நினைத்த காரியங்கள் ஏதேனும் ஒரு வகையில் நடந்தேறும். மனதில் உறுதியும், உத்வேகமும் கூடும். நேரத்திற்குத் தகுந்தவாறு விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி கண்டு வருவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் விவேகமான கருத்துகள் அதிகம் வெளிப்படும். உடன்பிறந்தோரால் ஒரு சில சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து சிரமத்தினைத் தரலாம்.பொதுப்பிரச்னைகளில் நண்பர்களோடு இணைந்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வண்டி, வாகனங்களால் குறிப்பிடத்தகுந்த ஆதாயம் உண்டாகும். வாரத்தின் இறுதியில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உறவினர்களால் ஒரு சில விஷயங்களில் தர்மசங்கடமான சூழலை சந்திக்க நேரலாம். மாணவர்கள் எழுத்துப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. பிள்ளைகளின் செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக அமையக்கூடும். அவர்களின் பெயரில் சேமிப்பில் இறங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரித்து வருவது போல உணர்வீர்கள். மாதத்தின் பிற்பாதியில் தொழில்முறையில் உங்களின் செயல்வேகம் அதிகரிக்கக் காண்பீர்கள். நற்பலன்களைத் தரும் மாதமாக அமையும். பரிகாரம்: திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்க திருப்புமுனை காண்பீர்கள்.
தனுசு: நமக்கென உள்ளதை பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரதி பலன்களை எதிர் பார்த்து செயலாற்றினால் நன்மை உண்டாவதில்லை. நீங்கள் கடவுளின் ஆசிர்வதிக்கபட்ட அன்பர்கள். அழியாத பேரின்பத்தின் மனிதர்கள். புனிதமும் பூரணத்துவமும் உங்களுக்குள்ளே இருக்கின்றன அதை உனறும் மாதம் இது.ராசிநாதன் குரு பகவானின் மறைவு ஸ்தான சஞ்சாரத்தை விட நல்ல பார்வைகள் மூலம், ஜெய ஸ்தானத்தின் வலிமையும் தொழில் முறையில் உங்களை சிறப்பாக செயல்பட வைக்கும். பொதுகாரியங்களில் முன் நின்று செயல்பட வேண்டிய சூழலை உருவாக்கும். கௌரவம் கருதி செய்ய வேண்டிய ஆடம்பர செலவுகள் அதிகரிக்கலாம். சூரியன், சுக்கிரன் இணைவதால் கற்பனையில் இருக்கும் விஷயங்களை நடைமுறைப்படுத்துவதில் கூடுதலாக செலவழிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். பேசும் வார்த்தைகளில் அனுபவத்தின் காரணமாக பொருள் பதிந்த கருத்துகள் வெளிப்படும். முக்கியமான நேரத்தில் அதிகம் பேசுவதை விட உங்கள் கருத்துகளை கூர்மையான எழுத்துகளின் மூலம் வெளிப்படுத்தி வெற்றி காண்பது நல்லது. தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் செயல் வெற்றிக்குத் துணை நிற்கும். உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய நேரிடும். ருசியான உணவு வகைகளை உண்பதில் சிறப்பு ஆர்வம் இருந்து வரும்.வண்டி, வாகனங்கள் தொழில்முறையில் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். உறவினர்களால் குறிப்பிடத்தகுந்த அனுகூலம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான முன்னேற்றத்தினைக் காணும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பிள்ளைகளின் ஆலோசனைகள் முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். குடும்பத்தினரோடு தொலைதூரப் பிரயாணம் செல்வதற்கான திட்டமிடுதலில் இறங்குவீர்கள். வாழ்க்கைத்துணையோடு வீண் விவாதத்தின் காரணமாக அவ்வப்போது கருத்துவேறுபாடு கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். தொழில்முறையில் உங்களின் சிறப்பான செயல்பாடுகள் நற்பெயரோடு குறிப்பிடத்தகுந்த தனலாபத்தினையும் பெற்றுத் தரும். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வு சார்ந்த பயிற்சிக்காக வெளியூர் செல்ல நேரிடும். நற்பலன்களை அனுபவிக்கும் மாதம் இது. பரிகாரம்: அன்னாபிஷேக நாளில் சிவாலய வழிபாடு நன்மை தரும்.
மகரம்: நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு வெற்றி நோக்குடை யவர்களாக வாழுங்கள். வெற்றிக்கான ரகசியம் இது தான்.நம்பிக்கையின் பாத்திரமாக் திகழும் மாதம் இது.ஜென்ம ராசியில் செவ்வாயின் உச்சம் பெற்ற சஞ்சார நிலை அக்டோபர் 26ம் தேதி வரை தொடர்வதாலும்,10ம், 11ம் இடத்தின் வலிமையாலும் உங்களின் பணிகள் எளிதாக நடக்கக் காண்பீர்கள். உண்மையாக உழைப்பதன் மூலம் தனி கௌரவம் அடைவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் எளிதில் காரியத்தடைகளைத் தாண்டி வருவீர்கள். நினைத்தது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததைக் கொண்டு சிறப்பாகச் செயல்படவேண்டும் என்ற உண்மையைப் புரிய வைப்பீர்கள். மனதில் தத்துவ சிந்தனைகள் அதிகமாக ஊற்றெடுக்கும். குடும்ப விவகாரங்களில் முன்நின்று செயல்பட்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவீர்கள். பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் இருந்து வரும். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் பொருள் நிறைந்த கருத்துகள் அடுத்தவர்களை சிந்திக்க வைக்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்களுக்கு உற்ற தோழனாக இருந்து வரும்.உங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் வகையிலான ஆன்மிகச் சந்திப்பு ஒன்றிற்கான வாய்ப்பு உருவாகும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருந்து வரும். பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளதால் சக பயணிகளிடம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கக் கூடும். பிள்ளைகளின் செயல்கள் பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் அமையும். வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் காரியங்களில் சிறப்பான வெற்றியைக் கண்டு வருவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் கூடுதல் செலவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தொழில்முறையில் உங்களின் திறமையான செயல்பாடுகள் சிறப்பான நற்பெயரைப் பெற்றுத் தரும். வியாபாரிகள் எதிர்பார்த்த தனலாபத்தினை அடையும் நேரம் இது. கலைத்துறையினர் தொழில்நுட்ப ரீதியாக வெற்றியைக் காண்பர். நற்பலன்களை அனுபவித்து உணரும் மாதம் இது. பரிகாரம் : சுவாமி ஐயப்பனை வழிபட்டு வாருங்கள்.
கும்பம்: பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மீகம் ஆகும். ஆன்மீக ஈடுபாட்டினால் மட்டுமே மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மை வெளிப்படும். அன்பு உள்ளத்தோடு ஆன்மாவைய் அறியும் மாதம் இது.தன, லாப ஸ்தானாதிபதி குரு பகவானின் பத்தாம் இடத்துச் சஞ்சாரமும், ஜென்ம ராசியில் செவ்வாயின் சஞ்சாரன் அக்டோபர் 27ம் தேதிக்கு பிறகு தொடர்வதால் இந்த மாதமும் சற்று போராடி வெற்றி கண்டு வருவீர்கள். நினைத்த காரியங்களைச் செய்து முடிக்க கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். எளிதில் முடிந்துவிடும் என்று எண்ணிய காரியங்கள் கூட சற்று இழுபறியைத் தரும். நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருப்பது கண்டு மனதில் நாம் சரியான பாதையில்தான் பயணிக்கிறோமா என்ற குழப்பம் அவ்வப்போது மனதில் எட்டிப்பார்க்கும். சிறு காரியங்களுக்குக் கூட பெரு முயற்சி செய்ய வேண்டியிருக்கும். பலவீனமான கிரக நிலையை சமாளிக்க ராசிநாதன் சனி பகவான் துணைநிற்கிறார். கடமையைச் செய்வதில் சற்றும் மனம் தளராத நீங்கள் எச்சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பொருளாதார நிலையில் சீரான முன்னேற்றம் கண்டு வருவீர்கள். பேசும் வார்த்தைகளில் தெளிவான ஸ்திரமான கருத்துகள் இடம் பெற்றிருக்கும். உடன்பிறந்தோருக்கு தொழில்முறையில் உதவி செய்ய வேண்டியிருக்கும். புதிய மனிதர்களுடனான சந்திப்பின் மூலம் அனுபவ அறிவினைப் பெறுவீர்கள். உறவினர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிட வேண்டிய சூழல் உருவாகும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகியவற்றால் செலவினங்கள் கூடும். மாணவர்கள் சோம்பலை விடுத்து சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். பிள்ளைகளின் வேகமான செயல்கள் மனதில் ஒருவித அச்சத்தினைத் தோற்றுவிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தினை நிறைவேற்ற கால நேரம் சாதகமாக அமையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். வியாபாரிகள் முற்பாதியில் ஓய்வின்றி உழைத்து பிற்பாதியில் சிறப்பான தனலாபத்தினை அடைவார்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுகமான சூழலை அனுபவிப்பார்கள். சனி-சுக்கிரனின் இணைவினால் வாழ்வியல் தரம் உயரும் மாதம் இது. பரிகாரம்: அஷ்டமியில் பைரவரை வழிபட கஷ்டங்கள் விலகிடும்.
மீனம்: மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுவோருக்கு உதவுவது ஒன்று தான்.நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்களாக வாழும் மாத இது.ராசிநாதன் குரு பகவானின் 9ம் இடத்து அமர்வு நிலை சுகமான வாழ்வியல் நிலைக்குத் துணை நிற்கும். அக்டோபர் 27ம் தேதி முதல் உண்டாகும் செவ்வாயின் பலத்தினால் சோர்வு நீங்கி செயல்வேகம் அதிகரிக்கக் காண்பீர்கள். எட்டாம் இடத்தின் வலிமை கூடுவதால் அநாவசிய ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். தொழில்முறையில் அடிக்கடி சிரமங்களை சந்தித்தாலும் ஒவ்வொரு விஷயத்திலும் ஆழ்ந்த அனுபவ அறிவினைப் பெறுவீர்கள். ராசிநாதன் குரு பகவான் மனதில் தன்னம்பிக்கையையும், தைரியத்தினையும் இடம்பெறச் செய்வார். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி இருந்து வரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். பேசும் வார்த்தைகளில் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் கருத்துகள் அதிகம் வெளிப்படும். நீங்கள் சொல்லும் கருத்துகள் சம்பந்தப்பட்டவர்களால் தவறாகப் பொருள் காணப்பட்டு அவப்பெயர் உருவாகலாம்.உடன்பிறந்தோரால் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் பயன் தரும் வகையில் அமையும். உறவினர்களோடு பழகும் போது இடைவெளி தேவை. மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். வண்டி, வாகனங்களில் முன்பின் தெரியாத நபர்களை ஏற்றுவதால் புதிய பிரச்னைகள் தோன்றலாம். பிள்ளைகளின் செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். தொற்று நோய் சார்ந்த பிரச்னைகளால் உடல்நிலையில் சிரமம் தோன்றலாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்களுக்கு முக்கியமான நேரத்தில் கைகொடுக்கும். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கும். பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்பட்டு சிறப்பான நற்பெயரை அடைவீர்கள். கலைத்துறையினர் தொழில்முறையில் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது. பரிகாரம்: வியாழன் தோறும் சாயிநாத ஸ்வாமி கோயிலில் அன்னதானம் செய்யுங்கள்.