logo
home தத்துவம் பிப்ரவரி 20, 2016
நம் மனம் கல்லாக இருந்தால் இறையருளை உணர முடிவதில்லை: காஞ்சி பெரியவர்
article image

நிறம்

கல்வியின் பயன் நாம் அடக்கமுடையவர்களாக இருப்பது தான். ஆனால், நேர்மாறாக, அகங்காரம் கொண்டவர்களாக பிள்ளைகள் வளர்வது பெருங்குறையாகும். பரம்பொருளான கடவுளைப் பற்றி அறிந்து கொள்வதே பயனுள்ள கல்வி. நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல் என்று சொல்வார்கள். இந்த உடம்பு நம்முடையது அல்ல, கடவுளுடையது என்ற எண்ணத்துடன் கீழே விழுவது தான் சாஷ்டாங்க நமஸ்காரம். அகிம்சையைப் பின்பற்றினால் நாம் இருக்கும் இடத் தில் சாந்தமும் தெய்வீகமும் தவழத் தொடங்கும். வாக்கினாலும், மனத்தினாலும், உடம்பாலும் பாவங்கள் செய்து வருகிறோம். மாறாக புண்ணிய செயல்களைச் செய்து நம் பாவத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும். நன்மைகளைச் செய்வதற்குத் தான் நமக்கு பிறவியைக் கடவுள் கொடுத்திருக் கிறார். அனாதைப் பிள்ளைகளை ஆதரிப்பது, வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவிசெய்வது, பிராணி களைப் பராமரிப்பதும், குறிப்பாகப் பசுவை பாது காப்பது, பசித்தவர்களுக்கு அன்னமிடுவது இப்படி எந்தவிதத்திலாவது நாம் முடிந்த சேவைகளைச் செய்யவேண்டும். கடவுள் அருள் என்பது எல்லா இடத்திலும் நிறைந் திருக்கிறது. ஆனால், நம் மனம் கல்லாக இருந்தால், நீருக்குள் இருக்கும் கல் போல நம்மால் இறையருளை உணர முடிவதில்லை. நம் வேலையை நாமே செய்து கொள்வதை கவுரவக் குறைச்சலாக நாம் நினைக்கிறோம். உண்மையில், நம் வேலையை நாம் அடுத்தவரிடம் செய்யச் சொல்வதுதான் கவுரவக் குறைச்சல். தொண்டு செய்வதால் நமக்கென்ன பயன் என்று எண்ணுகிறார்கள். ராமாயண அணில் நமக்கெல் லாம் உதாரணம். பாலம் செய்யும் பணியில் தன்னால் முடிந்த மணலைக் கொண்டு சேர்த்த அணிலைப் போல நம்மால் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும். குடும்பத்தை புறக்கணித்துவிட்டு சேவை செய்வ தால் பயனில்லை. குடும்பத்திற்கு சேவை செய்வது தான் முதல் கடமை. பெற்ற தாயை பிச்சை எடுக்கச் செய்துவிட்டு கோதானம் செய்வதெல்லாம் அதர்மம். எண்ணத்தை நிறுத்தப் பழகினால் மட்டுமே வேண்டாத பேச்சுக்களை நம்மால் குறைத்துக் கொள்ள முடியும். எண்ணமும் பேச்சும் கட்டுக்குள் வந்தால் தான் பயனுள்ள செயல்களில் நம் கவனம் செல்லத்துவங்கும். நம்முடைய வீடுகளில் பலவிதமான வடிவங்களில் கடவுளை வழிபாடு செய்கிறோம். கடவுளுக்கு இத்தனை பெயர்கள் உண்டா என்பதும், அவரின் உண்மைத் தன்மையை உணர இத்தனை வடி வங்கள் தேவையா என்பதும் நம் மனதில் சந்தேக மாய்த் தோன்றும். உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் உலகில் இல்லை. இருப்பவர் ஒருவர்தான். இன்னும் சொல்லப்போனால் நம் உயிரும் கூட அவரின் ஒரு வடிவம் தான். இவ்வுலகத்தை நடத்தும் பெரிய சக்தியாக இருந்து அவரே நம்மை வழி நடத்துகிறார். நம் மண்ணில் தோன்றிய மகான்கள், ஒரே கடவுளையே பல வடிவங்களாக வழிபட்டு, அவர வருக்குரிய வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த முறைகள் அவர்களின் அனுபவத் தின் வாயிலாக கண்டறியப்பட்டவை. அம்முறை களில் நமக்கு பிடித்ததைப்பின்பற்றினால் நாமும் அவர்களைப் போலவே, ஆண்டவனின் அருளைப் பெறமுடியும். நமது இஷ்டதெய்வ வழிபாட்டினைத் தொடர்ந்து செய்யும்போது, நமக்கென்று தனியான மனப்போக்கு தேவையில்லை என்ற நிலை உருவாகும். அப்போது இருப்பது ஒரே கடவுள் தான் என்ற உறுதிநிலையைப் பெற்றுவிடுவோம். அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகின்ற போது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல்வந்து மூடிக் கொள்வது போல, உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் இன்பம் தலைகாட்டிவிட்டு ஓடி விடுகிறது. பரம்பொருளைத்தவிர, வேறெதுவுமே உலகில் இல்லை என்பதை உணர்வதே ஞானமாகும். உலக இன்பங்களை வெளியுலகில் தேடிக் கொண் டிருக்கிறோம். அவை எல்லாம் நிலையான இன்பங் கள் அல்ல. நிலைத்த இன்பம் கடவுள் மட்டுமே. அந்த இன்பத்தை பெற உள்முகமாக தேடினால் பெறமுடியும். குழந்தைப் பருவத்தில் இருந்தே ஈஸ்வர தியானம் செய்யப் பழகினால், பாவ எண்ணங்கள் நம் மனதில் உற்பத்தியாவதைத் தடுத்து விடலாம். ஆடம்பரத்திற்காக பல மனிதர்கள் ஊதாரித்தன மாகச் செலவழிக்கிறார்கள். போலி கவுரவத்தைக் காப்பாற்ற பிறரிடம் கடன் வாங்கிக் செலவழிக்கும் குணம் நல்லதல்ல. உலகில் அமைதி தவழவேண்டுமானால் சாத்வீக மான மரக்கறி உணவுவகைகளையே சாப்பிட வேண்டும்.