logo
home தத்துவம் பிப்ரவரி 20, 2016
ஒரு பொருளின் முழு மதிப்பையும் உணர்ந்து அது கிடைத்தும் எனக்கு வேண்டாம் என்று சொல்வது தியாகம்: சாய்பாபா
article image

நிறம்

வாழ்க்கை இன்னதென்று அறியாமல், குறிக்கோள் ஏதும் இல்லாமல் மிருகங்கள் வாழ்கின்றன. மனிதனும் அப்படி விலங்கு வாழ்க்கை வாழ்வது அர்த்தமில்லை. அடுத்தவர்களின் குறைகளைக் களைவதில்தான் நம் கவனம் அனைத்தும் செல்கிறது. நம் குறை களை முதலில் களைய முற்படுவதே பயனுடைய தாகும். நம்மீது குற்றம் என்பதே இல்லை என்ற உயரிய நிலையை எட்டுவதே நம் கடமையாகும். பெற்றோரை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நீங்கள் தாய் தந்தையர் ஆகும்போது, உங்களை உங்கள் பிள்ளைகள் மதிப்புடன் நடத்துவார்கள். மண்ணில் பிறக்கும் உயிர்களில் மனிதப்பிறவி தனிச்சிறப்புடையது. கடவுளின் கரங்களில் இருந்து இவ்வரிய கொடையாகிய மனிதப்பிறவி என்னும் வெகுமதியை பெற்ற நாம், அதன் அருமையை உணராமல் வாழ்ந்தால், பெரும் பாவம் செய்தவர்களாகி விடுவோம். மனதை அலைபாய விடாமல் தடுப்பது யோகம். அவ்வாறில்லாமல் அலைபாய விட்டால் உண்டாகும் ரோகம். இன்றைய மனிதன் புலனடக்கம் இல்லாததால் உலக சுகங்களில் மூழ்கி தன்னையே இழந்து கொண்டிருக்கிறான். சிலர் காலை மடக்கி உட்காருதல், ஒற்றைக் காலில் நிற்றல் இதைத்தான் யோகாசனம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான யோகம் என்பது உயர்ந்த அன்புணர்வோடு இறைவனோடு நம்மை இணைத்துக் கொள்வதாகும். அன்பால் இதயத்தை நிறைத்திருக்கும் மனித னையே இறைவன் விரும்புகிறார். உண்மையோடும், பக்தியோடும் இருக்கும் மனிதர்களை இறைவனே தேடிவந்து விடுவார். அவர்களின் தேவைகளை நிறைவேற்றி அருள்வார். தாய் தன் குழந்தைகளின் தேவைகளை கேட் காமலே, வலிந்து செய்வது போல நாமும் பக்தியில் இறைவனின் குழந்தைகளாக மாறுவோம். தனித்து வாழாதீர்கள். ஒதுங்கி போகாதீர்கள். மனம் விட்டு பேசுங்கள். ஒற்றுமை உணர்வுடன் எல் லோருடனும் உறவாடுங்கள். பரஸ்பர அன்பினால் நம் வாழ்வு ஒளியுடையதாகும் என்ற உண்மையை உணருங்கள். கைகளின் அழகு வளையல்களில் இல்லை. அள்ளிக் கொடுப்பதில்தான் இருக்கிறது. இயலாதவர் களுக்கு கொடுத்து உதவுவோர்கள் தங்களை புனிதப்படுத்திக்கொள்கிறார்கள். கடவுளிடம் சரணாகதி அடைவது என்பது நம்முடைய செயல்களை எப்படியோ இறைவன் பார்த்துக் கொள்வான் என்று விட்டுவிடுவதல்ல. கடவுள் நம்மை செயலற்றுப் போகச்செய்ய விரும்ப வில்லை. மாறாக நம்மை நாமே உணரவேண்டும் என்றே விரும்புகிறார். தனிமையில் இறை சிந்தனையோடு ஒன்றுவது கடினமான செயல். ஆனால் பலர் கூடி பாடி வழிபடும் போது மனம் இறைசிந்தனையில் எளிதாக ஈடுபடும். நாக்கு கூர்மையான பற்களுக்கு நடுவில் கடிபடாமல் லாவகமாகச் செயலாற்றுவது போல், உலகில் தீயவர்களோடு பழக நேர்ந்தாலும் நல்லவர்கள் ஒழுக்கத்தை இழக்க மாட்டார்கள். தியாகம் என்பது வேறு. ஒன்றை வெறுப்பது என்பது வேறு. ஒரு பொருளின் முழு மதிப்பையும் உணர்ந்து அது கிடைத்தும் எனக்கு வேண்டாம் என்று சொல்வது தியாகம்.