logo
home மருத்துவம் ஜூன் 21, 2016
உடலையும் மனதையும் பலம் வாய்ந்ததாகவும், தெளிவானதாக மாற்றும் அரிய கலையான யோகாப் பயிற்சி
article image

நிறம்

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். 

"யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். 

உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம்.யோகாசனம்= யோகம்+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். 

மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன. சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது. முழு உடலுக்குமான பயிற்சியாகவே கருதப்படுகிறது. இதைப் போலவே சில யோகாசனங்கள் சுவாசத்தைச் சீர்ப்படுத்தினாலும், சுவாசம் சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச பந்தனம், பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன. அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே.

ஆசனப் பயிற்சி உட்காசனம், பத்மாசனம், வீராசனம், யோகமுத்ரா உத்தீதபத்மாசனம், சானுசீரானம், பஸ்திமோத்தாசனம், உத்தானபாத ஆசனம், நவாசனம், விபரீதகரணிசர்வாங்காசனம், ஹலாசனம்மச்சாசனம், சப்தவசீராசனம், புசங்காசனம், சலபாசனம், தணுராசனம், வச்சிராசனம், மயூராசனம், உசர்ட்டாசனம், மகாமுத்ரா, அர்த்தமத்த்ச்யோந்தராசனம், சிரசாசனம், சவாசனம், மயூராசனம், உசர்ட்டாசனம், அர்த்த மத்ச்யோந்திராசனம், அர்த்த சிரசானம், சிரசாசனம், நின்ற பாத ஆசனம், பிறையாசனம், பாதாசுத்தானம், திருகோணசனம், கோணாசனம், உட்டியானாநெளலிசக்கராசனம், சவாசனம், சாந்தியாசனம், பவனமுத்தாசனம், கந்தபீடாசனம், கோரசா ஆசனம், மிருகாசனம், நடராசா ஆசனம், ஊர்த்துவ பதமாசனம், பிரானாசனம், சம்பூரண சபீடாசனம், சதுரகோனோசனம், ஆகர்சன தனூராசனம், ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம், உருக்காசனம், ஏக அத்த புசங்காசனம், யோகா நித்திரைசாக்கோராசனம், கலா பைரப ஆசனம், அர்த்தபாத பச்சி மோத்தாசனாம், கவையாசனம், பூர்ண நவாசனம், முக்த அகத்த சிரசாசனம், ஏகபாத சிரசாசனம்.. 

போன்ற பயிற்சியை செய்யும் மனிதன் உடல் மட்டுமல்ல மனதும் மிகவும் வலிமையுடையதாக, எதையும் அலசி ஆராயும் பக்குவம் நிறைந்த நிலை பெற்றவனாக மாற்றும் அரிய கலைதான் இந்த யோகாசனம், இக்கலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றினாலும், இயந்திர உலகத்தில் தற்போது மனிதர்கள் படும் பல்வேறு அவஸ்தைகளுக்கு இந்தக் கலை பெரிய மருந்தாக பயன்படும் அரிய பொக்கிஷமாக விளங்குவதால் தற்காலத்தில் உலகம் முழுவதும் இக்கலைக்கு அதி முக்கியத்துவம் தரப்படுகிறது.
இக்கலைக்கு உலக நாடுகள் அனைத்தும் ஒரு சிறப்பு நாளாக அறிவிக்க வேண்டி பல்வேறு வழிகளில் கோரிக்கை வைக்கப்பட்டதும், உடனடியாக உலக நாடுகள் இக்கலைக்கென சிறப்பு நாளை ஏற்றுக் கொண்டதிலிருந்து இக்கலையின் மகத்துவத்தை புரிந்து கொள்ளலாம், ஐ.நா. சபை கூட யோகா தினத்தை கொண்டாடும் வகையில் தனது அலுவலகத்தில் யோகா வாழ்த்து செய்தியை மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு வாய்ந்த கலையை நாமும் நமது குழந்தைகளுக்கு இப்போதே கற்றுக் கொடுத்தால், வருங்காலத்தில் அவர்கள் மனநிலையும், உடல் நிலையும் மிகுந்த ஆரோக்கியமாகவும், திடமாகவும் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. 


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
             

www. aanmeegamalar.com 

எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com