logo
home பலன்கள் ஏப்ரல் 01, 2023
2023 ஏப்ரல் மாத பலன்கள் / மேஷம் முதல் மீனம் வரை
article image

நிறம்

மேஷம்: 

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம்) 

மனோ தைரியம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். பயணங்களில் கவனம் தேவை. ஆரோக்கியம் மேம்படும். தந்தை, தந்தை வழி உறவுகளின் சந்திப்பு உண்டாகும். தொழில் வளர்ச்சி, புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வாக்கில் இனிமை கூடும். இல்லறம் சிறக்கும். நவநாகரீக பொருட்களின் சேர்க்கை உண்டாகும். புதிய வாகன சேர்க்கை சிலருக்கு உண்டாகும். திடீர் அதிர்ஷடம், எதிர்பாராத தனவரவு போன்றவை சிலருக்கு அமையும். குழந்தைகளால் தேவையற்ற தொந்தரவுகள் சங்கடங்களை சிலர் சந்திக்கலாம். துணைவரின் நலனின் அக்கறை தேவை. மூத்த சகோதர வழியில் ஆதாயம் உண்டாகும். நீண்டகாலமாக வேலைக்கு முயன்றவர்களுக்கு உரிய வேலை கிடைக்கும்.  எந்த ஒரு விஷயத்தையும் பதட்டமின்றி நன்கு யோசித்து செயல்படவும்.

வழிபட வேண்டிய தெய்வம்:  

துர்க்கை அம்மன் வழிபாடு

பரிகாரம்:  

வெள்ளிக்கிழமைகளில் ராகு காலபூஜை.  

சந்திராஷ்டம தினங்கள்: 

 2023 ஏப்ரல் 8 ஆம் தேதி மதியம் முதல் 10 ஆம் தேதி முடியும் வரை.

 

ரிஷபம்:

(கிருத்திகை 2, 3, 4 பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்) 

ராசிநாதனின் சஞ்சாரம் ராசியிலேயே இருப்பதால் மகிழ்ச்சி, ஆரோக்கியம், நிம்மதியாக காணப்படுவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். சுப விரைய செலவுகளை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துக்கள் சிலருக்கு கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் மந்தநிலை நீடிக்கும். புதிய மனிதர்களின் தொடர்புகளை கவனமாக கையாள வேண்டும். துணையின் மூலம் நீண்டகால குடும்ப தேவைகள் நிறைவடையும். தாயாரின் ஆதரவு அனுகூலம் உண்டாகும். பெரியோரின் சந்திப்பு, அனுக்கிரகம் கிடைக்கும்.  பணியாளர்கள், தொழிலாளர்கள் நிலை உயரும். வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு உரிய வேலை கிடைக்கும். தாயார் வழி பூர்வீக ஆபரணங்கள் சிலருக்கு கிடைக்கும்.

 

வழிபட வேண்டிய தெய்வம்: 

விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு: 

பரிகாரம்:   

விநாயகர் துதி, ஹனுமான் சாலிசா பாராயணம்.

சந்திராஷ்டம தினங்கள்: 

சந்திராஷ்டம தினங்கள்: 2023 ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி மதியம் வரை.வரை.

 

மிதுனம்:

(மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) 

பதட்டத்தை தவிர்த்து நிதானமாக செயல்படவும். சகோதர வகையில் விட்டுக்கொடுத்து செல்லவும். தாயார் உடல்நலனில் கவனம் தேவை. வேலைதேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உரிய வேலை கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் குடும்ப நிலை சீராக செல்லும். தனவரவு உண்டாகும். பிள்ளைகளால் செலவுகள் உண்டு. துணைவரின் வழியே ஆதரவு ஆதாயம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வண்டி வாகன வகையில் செலவுகள் உண்டாகும். நீண்ட கால உடல் உபாதைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நிதி, நிர்வாகம் போன்ற துறைகளை சேர்ந்தவர்கள் சிறப்படைவர். சில நீண்டகால ஆசைகள் எதிர்பாராத விதமாக பூர்த்தியடையும்.  வேற்று மத, இன நபர்களின் சந்திப்பு நிகழும்.

 

வழிபட வேண்டிய தெய்வம்: 

சுப்பிரமணியர் வழிபாடு

பரிகாரம்: 

ஸ்கந்த சஷ்டி கவச பாராயணம்

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 ஏப்ரல் 13 ஆம் தேதி மதியம் முதல் 15 ஆம் தேதி முடியும் வரை.

 

கடகம்:

(புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய)

சுப விரையங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாடு பயணங் களை சிலர் மேற்கொள்வர். தூக்கம் குறையும். பதட்டமின்றி செயல்களில் ஈடுபடவும். வேலைப்பளு, பணியிடத்தில் சுமைகள் கூடும். தனவரவுகள் தாமதமாகும். அரசுவழி ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் கவனம் சிதறவிடாமல் இருக்க சுப்பிரமணியரை வழிபடவும். துணைவர் பணிக்கு செல்பவராயின் மேன்மை அடைவர். தாயார் வழி அனுகூலம் உண்டு. புதிய பொருட்கள், வாகன சேர்க்கை சிலருக்கு உண்டாகும். பத்திரிக்கை, கணினி ரசாயன துறைகளை சேர்ந்தவர்கள் முன்னேற்றம் காண்பர். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் நன்மைகள் உண்டாகும்.  பூர்வீக விவகாரங்கள் சாதகமாக முடியும். மாத பிற்பகுதி சிறப்பாக இருக்கும். 

வழிபட வேண்டிய தெய்வம்: 

நவகிரக வழிபாடு:  

பரிகாரம்:  

காலபைரவாஷ்டக பாராயணம்

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி மதியம்  வரை.

 

சிம்மம்:

(மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்)

மாத தொடக்கத்தில் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற தன விரையம் சிலருக்கு உண்டாகலாம். சுப செலவுகளும் உண்டு. தொழில் குடும்ப நிலை சிறப்பாக இருக்கும். அரசு மற்றும் அரசு துறை சார்ந்த ஊழியர்கள் ஆதாயம் அடைவர்.துணைவரின் மூலம் நன்மைகள் உண்டு என்ற போதிலும் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளை நீண்டகால விருப்பங்களை நிறைவேற்ற சில செலவுகளை செய்வீர்கள். சகோதர வகையில் மனக்கசப்பு, பிரிவினையை தடுக்க பொறுமையாக இருக்கவும். பணியிடத்தில் முன்னேற்றம் ஆதாயம் மாத பிற்பகுதியில் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் உண்டு. மூத்த சகோதரருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: 

தட்சிணா மூர்த்தி

பரிகாரம்:  

கொண்டைக்கடலை தானம்..

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 ஏப்ரல் 18 மதியம் முதல் 20 ஆம் தேதி வரை.

 

கன்னி:

(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்)

புதிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். வேற்று மத, இன நபர்களிடம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நீண்டகால தேவையற்ற கடன்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளதால் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படவும். புதிய முயற்சிகளை இரண்டு மாத காலத்திற்கு தவிர்க்கவும். பொன், வெள்ளி ஆபரண சேர்க்கை உண்டு. தனவரவு சீராக இருக்கும். தொழில், பணியில் தடை தாமதங்கள் நீடிக்கும். புதிய திட்டங்களை ஏப்ரல் மாதம் முடியும் வரை தவிர்ப்பது நல்லது. வெளியூர், வெளிநாடு பயணங்கள் சிலருக்கு உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். அரசு காரியங்களில் சிறிது தாமதம் ஏற்பட்டு மாத பிற்பகுதியில் முடியும். தந்தைவழி உறவுகளில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறு சுற்றுலா பயணங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் சீரான முன்னேற்றம் உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: 

விக்னேஸ்வரர்:

பரிகாரம்:  

விக்னேஸ்வர தியானம்

சந்திராஷ்டம தினங்கள்:

2023 ஏப்ரல் 21 முதல் 23 ஆம் தேதி மதியம் வரை.

 

துலாம்:

(சித்திரை 3, 4 பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தால் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உயில், ஆயுள்காப்பீடு போன்றவற்றின் மூலம் எதிர்பாராத செல்வசேர்க்கை சிலருக்கு உண்டாகலாம். தொழிலாளர்கள், பணியாளர்களின் உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஆகலாம். பொறுமையாக கடந்து செல்லவும். மே மாதத்திற்கு  பிறகு நிலவரம் சீராகும். படபடப்பு, பதட்டத்தை குறைத்து நிதானமாக செயல்படுவதன் மூலம் தேவையற்ற சங்கடங்களை தவிர்க்கலாம். சிலருக்கு தந்தை, தந்தைவழி உறவுகளிடம் முரண்பாடு ஏற்படலாம் பொறுமையுடன் செயல்படவும். சில துணிச்சலான நடவடிக்கைகளால் பூர்வீக விவகாரங்கள் சாதகமாகும். பிள்ளைகளின் படிப்பில் சிலருக்கு தடை, தாமதங்கள் உருவாகலாம். ஆஞ்சநேயரை வழிபடவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: 

 விநாயகர்,

பரிகாரம்:  

ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவசம் பாராயணம்.

சந்திராஷ்டம தினங்கள்:

2023 ஏப்ரல் 23 மதியம் முதல் 24 ஆம் தேதி வரை.

 

விருச்சிகம்:

(விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை முடிய) 

தொழில், வருமானம் சீராக இருக்கும். சிலருக்கு துணையின் வழியில் சில மருத்துவ செலவுகள் உண்டாகும். சிறுதூர பயணங்கள் உண்டாகும். சீருடை, மருத்துவம், ராணுவம் போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் பயனடைவர். தாயாரின் பூர்வீக சொத்துக்கள் சிலருக்கு கிடைக்கும். நிலம், மனை வாங்க வாய்ப்புகள் உண்டாகும். வேலைதேடிவருபவர்களுக்கு வேலை கிடைக்கும். தனவரவு சீராக இருக்கும் அதே வேலையில் அனாவசிய செலவுகளும் வந்து போகும். சிலருக்கு தோள் பட்டை, கழுத்து வலி வந்து போகும். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். துணைவர் பணிக்கு செல்பவராயின் ஆதாயம் அடைவர். பொருள் சேர்க்கை உண்டு. பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் எதிர்பாராத பாராட்டு கிடைக்கும். தாய்வழி உறவுகளின் வீட்டிற்கு சென்று வருவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்:

துர்க்கை அம்மன்  வழிபாடு:

பரிகாரம்:

வெள்ளிக்கிழமைகளில் ராகு காலபூஜை

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 ஏப்ரல் 24 மதியம் முதல் 26 ஆம் தேதி வரை.

 

தனுசு:

(மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்)

ஆரோக்கியம் மற்றும் மனமகிழ்ச்சி கூடும். அரசுமுறை காரியங்கள் அனுகூலம் அளிக்கும். பெரியோரின் சேர்க்கை சந்திப்புகள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தொழிலாளர், பணியாளர் நிலை உயரும். பேச்சில் நிதானம் இருக்கும். நீண்டநாள் இழுபறியில் இருந்த காரியங்கள் ஜெயமடைய நேரம் கூடிவரும். தாயார்வழியில் தனவரவு, சுக சௌகரிய தேவைகள் நிறைவேறும். பிள்ளைகள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். துணையுடன் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். கணினி, மீடியா, எழுத்து, இலக்கிய துறைகளை சேர்ந்தவர்கள் சிறப்படைவர். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்டகால ஆசைகள் நிறைவேறுவதில் தடை, தாமதங்கள் நீடிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: 

 ஸ்ரீ மஹாலக்ஷ்மி;
 

பரிகாரம்:  

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம், துர்காஷ்டகம்.

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி மதியம் வரை.

 

மகரம்:

(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) 

உடல்நிலை சிறக்கும். உற்சாகமாக திகழ்வீர்கள். தொழிலாளர், பணியாளர்கள் நிலை உயரும். புதிய நிலபுலன்கள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். வேலைதேடிவருபவர்களுக்கு உரிய வேலை கிடைக்கும். விமானம், ரசாயனம், கணினி, பத்திரிக்கை  துறைகளை சேர்ந்தோர் ஏற்றம் அடைவர். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். அரசுமுறை, அலுவல் முறை பயணங்கள் உண்டாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். தாயாருக்கு சிறு சிறு உபாதைகள் வந்து போகும். பணிக்கு செல்பவர்கள் பணியில் சிறு இடைஞ்சல்களை சந்திப்பர். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அவர்களால் பெருமை உண்டாகும். பதட்டம், படபடப்பு வந்து போகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். மூத்த சகோதர வழியில் செலவுகள் சிலருக்கு உண்டாகலாம். மாத பிற்பகுதி சிறப்பாக இருக்கும்..

வழிபட வேண்டிய தெய்வம்: 

சுப்பிரமணியர் வழிபாடு  

பரிகாரம்:  

ஸ்கந்த சஷ்டி கவச பாராயணம்

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 ஏப்ரல் 2 மதியம் முதல் 3 ஆம் தேதி முடியம் வரை

 

கும்பம்:

 (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி, 1, 2, 3 பாதங்கள்) 

நாள்பட்ட தொந்தரவுகளிலிருந்து மீண்டு வருவீர்கள். புதிய தெம்பு உற்சாகம் பிறருக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். சிலருக்கு சித்தர்கள் வழிபாடு உண்டாகும். வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள்  கிடைக்கும். தனவரவு சிறப்பாக இருக்கும். அரசு பணிக்கு முயற்சிப்பவர்களுக்கு உரிய பணி கிடைக்கும். நவநாகரீக, ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பிள்ளைகள் பிடிவாதத்தை விட்டுவிட்டு பெற்றோர் சொல்லைக்கேட்டு நடப்பது அவர்களின் எதிர்காலத்திற்கு நன்மையளிக்கும். பூமி, எந்திரம், மருத்துவம், சீருடை பணியாளர்கள் தொழில் முறை வளர்ச்சி காண்பர். ஆன்மீக சம்பந்த பட்ட கனவுகள் தோன்றலாம். கணவன் மனைவி இடையே சுமூக போக்கு நீடிக்கும். ஓட்டல்,  நவநாகரீக பொருட்களை உற்பத்தி செய்வோர், விற்பனை செய்வோர் ஆதாயம் அடைவர்.

வழிபட வேண்டிய தெய்வம்:

 கால பைரவர் வழிபாடு:   

பரிகாரம்:  

கோளாறு திருப்பதிக பாராயணம்.

சந்திராஷ்டம தினங்கள்:

2023 ஏப்ரல் 4 முதல் 6 ஆம் தேதி மதியம் வரை.

 

மீனம்:

(பூரட்டாதி  4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) 

நிம்மதி பெருகும். ஆரோக்கியம் சிறக்கும். தனவரவு உயர்ந்த போதிலும் மாத முற்பகுதியில் அனாவசிய விரைய செலவுகள் கூடும். துணைவர் பணி செய்பவராயின் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப்பெறுவர். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான வேலைகள் அமையும். உல்லாச பயணங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் செலவுகள் உண்டாகும். நாள்பட்ட உடல் உபாதைகள் விலகும். கணவன், மனைவி இடையே பரஸ்பர உதவி அனுகூலமாக இருக்கும். சிலருக்கு தாயாருடன் சிறு மனத்தாங்கல் ஏற்படலாம். பொறுமையாக விட்டு கொடுத்து செல்வது நல்லது. தாய்வழி பூர்வீக விவகாரங்கள் இழுபறியாக இருக்கும். வரவேண்டிய கடன்கள் வசூலாவதில் தாமதம் நீடிக்கும். கடன் கொடுக்கல், வாங்கலை தவிர்ப்பது நல்லது.

வழிபட வேண்டிய தெய்வம்: 

ஸ்ரீ மஹாலக்ஷ்மி;

பரிகாரம்: 

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம், துர்காஷ்டகம்.

சந்திராஷ்டம தினங்கள்: 

2023 ஏப்ரல் 6 ஆம் தேதி மதியம் முதல் 8 ஆம் தேதி மதியம்  வரை.

 

குறிப்பு:

ஒருவரது தசாபுக்தியே 65-75% வரையிலும், கோட்சாரம் 25-35% வரையும் பலனளிக்கும். எனவே, இவை பொதுப்பலன்கள் எனக்கொள்ள வேண்டும். ராசி, லக்கினம் இரண்டில் எது வலுவாக உள்ளதோ அதை பொறுத்தே பலன்கள் அமையும். பலன்களை ராசிப்படியும், லக்கினத்தையும் ராசியாக பாவித்தும் ஒப்பிட்டுப்பார்த்து நடைமுறையில் பொருந்தும் பலன்களை அறிந்து கொள்ளவும். 

ஜோதிட ஆலோசனைக்கு :- 

ஸ்ரீ வைத்தீஸ்வரன் அஸ்ட்ரோ  ரிசர்ச் சென்டர், கிருஷ்ணகிரி.

கி. கார்த்திகேயன்.

செல்: 7010909413.