logo
home ஆன்மீகம் ஆகஸ்ட் 23, 2023
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சந்திரனை ஆராய்ந்த இந்துக்கள்
article image

நிறம்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சந்திரனை ஆராய்ந்த இந்துக்கள், ஜெர்மனியர்களால் திருடப்பட்ட  இந்து வேதங்களே, உலக நாடுகளின் நிலவு ஆராய்ச்சிக்கு மூலகாரணம்

 

முதன்முதலாக விமானம் மூலம் வானத்தில் பறந்தவர்கள் யாரென்று கேட்டால் பெரும்பாலோர் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் எனப் பதில் சொல்லுவார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல.

உலகில் முதன்முதலாக விமானம் ஒன்றைத் தயாரித்து அதன் மூலம் வானத்தில் பறந்துகாட்டியவர் ஷிவா கர் தல்பாதே என்கிற இந்தியர் தான்.

1895-ஆம் வருடம் மும்பையைச் சேர்ந்த ஷிவாகர் தல்பாதே காற்றை விடவும் எடைகூடியதொரு விமானத்தைத் தயாரித்து அதற்கு "மருட்சகா (விணீக்ஷீutsணீளீலீணீ) என்று பெயரும் வைத்தார். பின்னர் அந்த விமானம் மும்பையின் சௌபாத்தி கடற்கரையில் வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது.

இந்தியன் அதுவும் ஒரு இந்து விமானம் ஒன்றினை உருவாக்கி அதனை விண்ணில் பறக்க வைத்ததை பிரிட்டிஷ் அரசாங்கம் விரும்பவில்லை. ஷிவாகருக்கு எல்லா விதங்களிலும் அவர்கள் தொல்லைகள் கொடுத்தார்கள். விமானம் தயாரிப்பதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதனைத் தடுக்க முனைந்தார்கள். இருந்தாலும் ஷிவாகர் தல்பதே மிகுந்த சிரமத்துடன் அந்தப் பணத்தைத் திரட்டி னார்.

தடைகளையெல்லாம் வென்று அவரது விமானம் சௌபாத்தி கடற்கரையில் வெற்றிகரமாகப் பறக்க வைத்தார். பழமையான "வ்யாமானிக சாஸ்த்ரா"வின் அடிப்படையில் கட்டப்பட்டஅந்த விமானத்தில் பாதரசம் எரிபொருளாகப்பயன்படுத் தப்பட்டது. அதனைக் காரணம் காட்டி, ஷிவாகர் தல்பதே பாதரசத்திலிருந்து வெடிகுண்டுகள் தயாரித்ததாகப் பொய்யான குற்றம் சுமத்தி அவரைச் சிறையில் அடைத்தார்கள் பிரிட்டிஷ் காரர்கள். 

ஷிவாகர் பல ஆண்டுகள் சிறையில்கழித்தார். அவர் சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் தனது விமானத்தைப் பறக்க வைப்பதற்கு முன்னால் ரைட் சகோதரர்கள் அவர்களின் விமானத்தை விண்ணில் பறக்கவைத்திருந்தார்கள்.

தன்னுடைய கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காத மனவருத்தத்துடன் தல்பாதே 1916-ஆம் வருடம் மரணமடைந்தார்.

அன்றைய காலகட்டத்தில் பாதரசத்தை விமான எரிபொருளாக உபயோகிக்க முடியாது என பல விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்தது. இருப்பினும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா இன்றைக்கு அதன் விண்கலங்களைப் பறக்கவைக்க பாதரசத்தை உபயோகித்து வருகிறது என்பதனை வெளியில் எவரும் அதிகம் பேசுவதில்லை. 

அந்த உண்மை வெளிவந்தால் ஷிவாகர் தல்ப தேக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டிய நிலை வரலாம். இப்படித்தான் இந்தியாவையும், இந்து மக்களின் சாதனைகளையும் உலக நாடுகள் மழுங்கடித்து வருகின்றன.

தற்போது உலக நாடுகள் சந்திரனை குறி வைத்துசந்திரனை நெருங்க எவ்வளவோ முயற்சி செய்து வருகிறது. ஆனால் அந்த நாடுகள் அனைத்தும் இந்திய சாஸ்திரங்களில் குறிப்பிட்ட வழிமுறைகளை திருடித்தான் சந்திரனை நெருங்க முற்படுகிறது என்று பலருக்கு தெரியாது.

1940களில் ஜெர்மானியர்கள் இந்தியாவில் இருந்து களவாடி சென்ற சில அறிவியல் விஷயங் களை, இந்து ஞானியரின் ஓலை சுவடிகளின் விஷயங்களுக்கு விஞ்ஞான வடிவம் கொடுக்க அதிலிருந்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் விஷயங்கள் பறக்க அவர்கள் கருவிகளை உரு வாக்கினார்கள்

சீனர்கள் ரஷ்யர்களிடம் இருந்து பிரதி எடுத் தார்கள். இன்று உலகம் காணும் விண்வெளி பந்தயத்தில் அவர்கள் முன்னணியில் இருந்தா லும் அடிப்படை அறிவு ஜெர்மானியர்கள்கொடுத்ததே அந்த ஜெர்மானியர்களுக்கு அந்த ஞானத்தை கொடுத்தது நமது பாரதம்.

18, 19ம் நூற்றாண்டில் ஜெர்மானியர்கள் தமிழக தஞ்சாவூர் சுவடிகளிலும், ஆதிச்ச நலலூரிலும், தஞ்சை பெரியகோவிலும் கல்வெட்டும் சுவடியும் புரட்டி எடுத்து சென்ற அறிவு செல்வம்தான் 1940களில் உலகை மிரட்டியது அதை யாரும் மறுக்கமுடியாது.

இந்துக்களின் செழுமையையும், அறிவையும் குறைகூறி, இந்து தெய்வங்களை வசைபாடி தங் கள் மதங்களை பரப்ப வந்த கூட்டத்தினரின் மாய வலையில் விழுந்த இந்துக்கள் தங்களிடமிருந்த பலத்தை தாங்கள் அறியாமல் போனதும்.

மிகவும் சாதுவாக அனைத்தையும் கடந்து சென்றதன் விளைவுதான், நமது வேதங்களை, நமது கண்முன்னே கிண்டல் கேலி செய்யும் மடையர்களை கண்டிக்காமல் கடந்து சென்ற தாலும் வந்த வினைப் பயன், தங்களிடம்அதிகார மின்மை, அறியாமை, வேதங்களை இந்து ஞானங்களை மூடநம்பிக்கை என ஒதுக்கிய மடதனமெல்லாம் ஜெர்மானியருக்கு வாய்ப்பா யிற்று இதனால் பாரதம் பின்னடைந்தது.

அந்த வகையில். சந்திரயான் நிலவினை நெருங்கும் நேரமிது,  அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் நமக்கு முன் அதை செய்திருக்கலாம் ஆனால் அவர்களுக்கும் நிலவுக்குமான அறிவு அதாவது அதன் தொலைவு தூரம் அதன் இதர கணக்கீடுகள் பாரம்பரியமாக உண்டா என்றால் இல்லை. 

சந்திராயன் நிலாவினை தொடலாம்,நிலாவுக்கு பூமிக்குமான கணக்குகளை விஞ்ஞானம் சொல்ல லாம் ஆனால் அன்றே அதன் தொலைவை இந்துக்கள் தெளிவாக அறிந்திருந்தனர்.

63 நாயன்மாரில் ஒருவர் காரி நாயனார், அவர் எழுதிய கணக்காதிகாரம் பிரசித்தியானது, பெரும் சிவனடியாரான அவரின் அந்த கணக்கு நூலில் பெரும் கணக்கீடுகள் உண்டு

அந்நூல் நீளத்தை சொல்கின்றது இப்படி 

 

"வையணுதூள் பஞ்சு மயிர்முனை நுண்மணல்

ஐயெள்ளு  நெல்லுடனே 

அவ்விரலாம் & பெய்வளையாய்

எட்டின் வழியெல்லாம் ஏற்றியே அவ்விரலின்

சட்டமதாம் பன்னிரெண்டு சாண்."

 

 • 8 அணுக்கள் கொண்டது ஒரு தூள் (அல்லது துகள் அல்லது கதிரெழுதுகள்), 
 • 8 தூள்கள் கொண்டது ஒரு பஞ்சிற்று (துசும்பு),
 • 8 பஞ்சிற்றுக்கள் கொண்டது ஒரு நுண்மணல், 
 • 8 நுண்மணல்கள் கொண்டதுஒரு ஐந்தை (அல்லது ஐ அல்லதுசிறுகடுகு). 
 • 8 சிறுகடுகு கொண்டது ஒரு எள்ளு, 
 • 8 எள்ளுகள் சேர்ந்தது ஒரு நெல், 
 • 8 நெல்கள் கொண்டது ஒரு விரல். 
 • 12 விரல்கள் கொண்டது ஒரு சாண்.

 

இப்படி ஒரு அணு அளவு நுண்ணிய அளவு அன்றே இருந்ததாலே அழகிய சிற்பங்களும் பெரும் ஆலயங்களும் உருவாயின, இந்த கணக்கீடு வழிகாட்டிற்று இன்று அணுகடிகாரம் சொல்லும் நுணுக்கமான அளவை அன்றே சொன்னது இந்துமதம்

 

இன்னொரு பாடல் கால அளவை சொல்கின்றது

 

"நிமைநொடி மாத்திரை 

நேர்முற் றிதனை

இணைகுரு பற்றும் உயிரென்றார் அனைய உயிர்

ஆறுசணி கம்மீரா றாகும்வினாடி தாம்

அறுபதே நாழிகையாம்"

 

 • கண்ணிமைக்கும் நேரம் இரண்டு கொண்டது கைநொடி,
 • இரு கைநொடி நேரம் ஒரு மாத்திரை,
 • மாத்திரிரை இரண்டு கொண்டது குரு,
 • இரண்டு குரு கொண்டது உயிர்
 • உயிர் ஆறு கொண்டது ஷனிகம்,
 • 12 ஷனிகம் கொண்டது வினாடி,
 • 60 வினாடி (விநாழி) ஒரு நாழிகை

 

இப்படி கால அளவை மிக தெளிவாக ஒரு பாடல் சொல்கின்றது.

அடுத்த பாடல் சந்திரனின் தொலைவை இந்துக்கள் அறிந்திருந்ததை சொல்கின்றது

 

"மண்ணளவை மாற்றியது 

வண்கதிர்கள் வானளவாம்

எண்ணளவாய் கொண்டோர் 

இம்பியே  எண்ணின் 

பெருக்கவே ஏழ்கடலின் மற்றவை யொன்றின் 

பெருக்கமே ஏழ்கடலின் பீடு"

இது கொஞ்சம் நுணுக்கமானது அதாவது பூமியின் விட்டத்தை 108 மடங்கு பெருக்கினால் சூரியனின் தொலைவு வரும், நிலாவின் விட்டத் தை 108 மடங்கு பெருக்கினால் பூமிக்கும் நிலவுக்குமான‌ தொலைவு வரும்/

இதே தொலைவுதான் ஏழு கடலுக்கும் பூமிக்கு மான தொலைவை கணிக்கும் முறை என்கின்றது பாடல், கோள்களின் விட்டத்துக்கும் அவை சுற்றும் கோளுக்குமான தொடர்பு 108 மடங்கு இருப்பது போல் ஏழ்கடல் என சொல்லபடும் ஏழு பிரபஞ்சத்துக்குமான தொலைவுக்கும் பொருந்தி வருமாம்.

ஆம், பூமிக்கும் நிலாவுக்குமான தொலைவை என்றோ தெளிவாக அறிந்திருந்த ஞானம் இந்துக் களுக்கு இருந்தது இன்று விஞ்ஞானம் இதை ஆதாரத்துடன் விளக்கும் போது இந்துக்களின் பிரபஞ்ச ஞானம் எவ்வளவு மேன்மையானது என்பது புரிகின்றது

இப்படி பெரும் அறிவோடு இருந்த இனத்துக்கு பிரிட்டிஷ்காரன் வந்து கல்வி தந்தான் என்பது மடமை, நம்மிடம் இருந்துதான் ஐரோப்பா எல்லாம் பெற்றது.

சந்திரயான்  3 நிலவினை நெருங்குகின்றது, விஞ்ஞானமாக நிலவில் கால்பதிக்கும் நான்காம் நாடு இந்தியா. 

ஆனால் உலக வரலாற்றில் முதன் முதலில் இந்த பிரபஞ்சத்தை முதலில் அளந்துகாட்டிய மதம் இந்துமதம். 

அவ்வகையில் மெய்ஞான வகையில் நிலவினை முதலில் தொட்ட நாடு பாரதம் அந்த பெருமை வேறு எந்த இனத்திற்கும் இல்லை.

நடப்பது பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்துக்கள் சொன்ன காட்சிகளின் உண்மை நிரூபணம் அன்றி வேறல்ல. 

விரைவில் பூமியுடன் நிலவை இணைக்கும் இஸ்ரோவுக்கும் சந்திராயனுக்கு வாழ்த்துக்கள்.