logo
home பலன்கள் செப்டம்பர் 27, 2019
சிறந்த பலனைத்தரும் முன்னோருக்கு உகந்த 6 பொருட்களும், அமாவாசை வழிபாடும்
article image

நிறம்

வழிபாடுகளில் முதல்படியாக இருப்பது பித்ரு வழிபாடு, இரண்டாவது படியாக இருப்பது குலதெய்வ வழிபாடு, இந்த இரண்டு வழிபாட்டு கடவுளின் ஆசி இருந்தால் பெருந்தெய்வமான சிவன், விஷ்ணு, அம்பாள், விநாயகர், முருகர் போன்ற கடவுள் வழிபாடு எளிதாக சித்திக்கும். மேலும் பெரு தெய்வங்களுக்கு செய்யும் பூஜை, வேத மந்திரங்களின் பலன்களை முழுமையாக அடைய, பித்ருவழிபாடும், குலதெய்வ வழிபாடும் மிகப்பெரிய உறுதுணையாக விளங்கும். இதில் குலதெய்வங்களுக்கும், பெருதெய்வங்களுக்கும் ஒருசில பொருட்கள் இஷ்ட பொருட்களாக இருக்கும், உதாரணத்திற்கு குலதெய்வங்களுக்கு ஒருசில படையல்கள், காய்கறிகள் போன்றவை, பெரு தெய்வங்களுக்கு இஷ்டப்பொருட்களாக மாவிலை, பூக்கள், இலை, வில்வம், துளசி போன்றவை இஷ்டப்பொருட்களாகவும், ஒவ்வொரு குறிப்பிட்ட தெய்வங்கள் வாசம் செய்யும் பொருட்களாகவும் விளங்கும். சிவனை வழிபடும்போது, வில்வத்தையும், திருமாலை துளசியாலும், அம்மனை வேப்ப இலையாலும் இஷ்டபொருட்களை வைத்து வழிபடுவார்கள். இதைப்போன்றுதான் நமது பித்ருக்களின் முழுமையான ஆசி பெற அவர்களுக்கும் ஒருசில இஷ்டப் பொருட்கள் இருக்கின்றன அவற்றை நாம் வீட்டில் தூய்மையாக வைத்திருந்தாலே பித்ருக்கள் மனம் மகிழ்வார்கள். நமது வீட்டில் ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் அன்று வருகை தருவர்; வந்து, அமாவாசை முடியும் வரை இரண்டு நாட்கள் வரை தங்குவர்; நாம் உலகத்தில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் வருவதும், வந்து நம்மை ஆசிர்வாதிப்பதும் யுகம் யுகமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது; அப்படி வரும் போது அவர்கள் வீட்டில் உள்ள கீழ்காணும் பொருட்களில்தான் தங்கியிருப்பார்கள். பித்ருக்கள் தங்கும் பொருட்கள் பட்டியல்: உரல், ஆட்டுக் கல், செம்புப் பாத்திரம், நெல் மூட்டை, அரிசிப்பானை, நறுமணம் தரும் பூக்கள், மூங்கிலில் செய்யப்பட்டடபொருட்கள், சுரைக் குடுவை, துளசி மாடம், பசு, மிருதங்கம், மாங்கல்யச் சரடுகள், வெட்டி வேர், மெட்டி, மாசிக்காய், சீந்தல் கொடி, பிரண்டை, கஸ்தூரி மஞ்சள், பஞ்சபாத்திரமும் உத்திரிணியும், இப்படி இவர்கள் தங்கியிருக்கும்போது பித்ருக்களுக்கு உகந்த பொருட்களாக 6 பொருட்கள் விளங்குகிறது. அதன் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உலக்கை, முறம், மண்பானை, சந்தனக் கல், சந்தனக் கட்டை, அம்மி இவைகளில் ஏதாவது ஐந்து பொருட்களாவது நமது வீட்டில் இருப்பது அவசியம்; இதனால்தான் நம் முன்னோர் மேற்கண்ட பொருட்களை எப்போதும் மிகுந்த தூய்மையாக வைத்திருப்பார்கள். ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்து வந்தாலே நமது அனைத்து கடன்/நோய்/எதிரி/வருமானப் பற்றாக்குறை முழுமையாக நீங்கிவிடும்; மாதம் தோறும் பித்ரு தர்ப்பணம் அல்லது ஆண்டுக்கு மூன்று முறையாவது (ஆடி அமாவசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை) அல்லது புரட்டாசி அமாவாசையிலாவது செய்து வர வேண்டும். கால.மாற்றத்தில் அவர் அவர்களின் செயல்பாடுகள் மூலமாக மேலே கூறப்பட்ட பொருட்கள் நமது வீட்டில் இல்லாமல் போய்வி்ட்டது எவர் வீட்டிலும் இவை அனைத்தும் இருக்கின்றனவோ அவர்களுக்கு அவர்களது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.