logo
home மருத்துவம் மே 03, 2020
கொரோனா கிருமியை தடுக்க உதவும்! கபச்சுர மூலிகை குடிநீர் தயாரிக்கும் முறை
article image

நிறம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு நோய்களுக்கும், அடுத்து வரவிருந்த காலங்களில் ஏற்படவிருந்த நோய்க்கும் மருந்தை கண்டுபிடித்து எழுதி வைத்துள்ளார்கள் நமது முன்னோர்கள்.
இதில் சுரம் சம்பந்தப்பட்ட நோய்களை மட்டும் இரண்டு வகையாக பிரித்துள்ளனர். அந்த இரண்டுவகையிலும், வகைக்கு 12 மற்றும் 52 என மொத்தம் 64 வகை சுரங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதில்,
தன்வழிச்சுரம்: 12 புறவழிச்சுரம்: 52 மொத்த சுரத்தின் எண்ணிக்கை: 64
காய்ச்சலை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து, அதை 64 வகைப்படுத்தி, அத்தனைக்கும் மருந்து கண்டுபிடித்து ஆயிரம் ஆயிரம் ஆண்டு கள் ஓடிவிட்டன.
தற்போது கொலைகார நோயாக மாறி வரும் கொரோனா வைரஸ் போன்று, கொடிய வைரஸ்களால் வரும் பாதிப்புகள் புறவழிச்சுரத்தின் கீழ் வருவது, இது தொற்று மூலம் நுரையீரலை நேரடியாக பாதிக்கும் ஒரு வைரஸ்.
கிருமி மற்றும் வைரசால் ஏற்படும் அனைத்து நுரையீரல் தொற்றுகளுக்கும் சித்தர்கள் கண்டு பிடித்த மருந்து இதோ.
கபசுரக் குடிநீர்! இந்த சுபசுரக் குடிநீர் பற்றி சித்த வைத்திய திரட்டு என்ற நூலில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த கபசுரக் குடிநீர் தயாரிப்பு முறைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த சுபசுரக் குடிநீர் எந்த மூலிகைகளால் தயாரிக்கப்படுகிறது என்பதையும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
தேவையான மருந்துகள் 1. சுக்கு - 35 கிராம் 2. திப்பிலி - 35 கிராம் 3. இலவங்கம் - 35 கிராம் 4. சிறுகாஞ்சொரிவேர் - 35 கிராம் 5. அக்கிரகாரம் - 35 கிராம் 6. முள்ளிவேர் - 35 கிராம் 7. கடுக்காய்த்தோல் - 35 கிராம் 8. ஆடாதோடை - 35 கிராம் 9. கற்பூரவள்ளி இலை - 35 கிராம் 10. கோஷ்டம் - 35 கிராம் 11. சீந்தில் கொடி - 35 கிராம் 12. சிறுதேக்கு - 35 கிராம் 13. நிலவேம்பு சமூலம் - 35 கிராம் 14. வட்டத்திருப்பி (பாடக்கிழங்கு) - 35 கிராம் 15. முத்தக்காசு (கோரைக் கிழங்கு) - 35 கிராம்
கபசுரகுடிநீர் சூரணம் செய்முறை!
மேற்கண்டவற்றை நன்றாக பொடித்து சலிக்கப்பட்ட நிலையில் 'சூர்ணங்கள்' என்றும், ஒன்றிரண்டாகப் பொடிக்கப்பட்டு சலிக்கப்படாத நிலையில் 'க்வாத சூர்ணங்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
க்வாத சூர்ணங்கள் சித்த மருத்துவத்தில் குடிநீர்செய்து உட்கொள்வதற்காகவே பெரும் பாலும் பயன்படுத்தப் படுவதால் "குடிநீர் சூர்ணம்" என்று வழங்கபடுகின்றன. சுத்தமான உலர்ந்த மேற்கண்ட மருத்துவ பொருட்களை ஒன்றிரண்டாகப் பொடித்து நன்கு கலந்தால் கபசுரக் குடிநீர் சூர்ணம் தயார்.
இப்பொழுது இச்சூர்ணத்தை வைத்து கபசுர குடிநீர் எப்படி தயார் செய்து பயன்படுத்துவது என பார்ப்போம்.
கபசுரக் குடிநீர் செய்முறை!
35 கிராம் குடிநீர் சூரணத்தை 3 லிட்டர் நீரில் போட்டு சிறுதீயில் காய்ச்சி பன்னிரண்டி லொன்றாய் குறுக்கி வடிகட்டி குடிநீர் எடுக்கவும்.
250ml கபசுரக் குடிநீர் கிடைக்கும். சிறியவர்கள் 30ml பெரியவர்கள் 60ml வீதம் தினமும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் குடிக்கலாம்.
தீரும் நோய்கள்: கிருமி மற்றும் வைரசால் ஏற்படும் அனைத்து நுரையீரல் தொற்று நோய்கள் (கபசுரம்) கொரோனா வைரஸ் தடுப்பிற்கு இந்த மருந்தை கொடுக்கலாம் என மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் பரிந்துரை செய்துள்ளார். அரசு இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி ஆய்வு செய்து வெளியிட வேண்டும் என கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன. தற்போது கொரானா நோய்த் தொற்று தடுப்புக்கான ஒரே மருந்தாக நம் முன்னோர் சொன்ன மருத்தே கை கொடுக்கவிருக்கிறது.