logo
home மருத்துவம் ஜனவரி 28, 2016
தூக்கம் தரும் சோற்றுக்கற்றாழை!
article image

நிறம்

சோற்றுக்கற்றாழை ஒரு அற்புத மருந்து என்று சொன்னால் அது மிகையாகாது. சோற்றுக்கற்றாழையின் மடலை சீவி அதன் உள்ளே இருக்கும் சதையை தண்ணீரில் நன்றாக கழுவி பனைவெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து 4 சுண்டைக்காய் அளவு தினமும் காலை வெறும் வயிற்றில் உண்டால் உடல் பலவீனம் போக்குவதோடு ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்தும். சோற்றுக்கற்றாழையை காய வைத்து இடித்து பொடியாக்கி சலித்து எடுத்து தினமும் காலை வெறும் வயிற்றில் கால் டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பல்வேறு காரணங்களால் வரக்கூடிய அனைத்து வயிற்று வலிகளும் விலகிவிடும். சோற்றுக்கற்றாழையை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளர்வதோடு நல்ல தூக்கம் வரும். இதே எண்ணெயை உள்ளுக்கு சாப்பிடுவதால் கல்லீரல் நோய்களிலிருந்து விடுதலை கிடைப்பதோடு நீண்டகால மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுதலை கிடைக்கும். மேலும் இந்த எண்ணெய் பெண்களுக்கு வரக்கூடிய மாதவிலக்கு கோளாறுகளை சரி செய்யும் வல்லமை படைத்தது.