logo
home மருத்துவம் ஜனவரி 24, 2016
எளிமையாக நோயை விரட்டும் வீட்டு வைத்தியம்
article image

நிறம்

காசநோய் குணமாக: வெங்காயப்பூவையும், வெங்காயத்தையும் சேர்த்து இடித்து ஒரு அவுன்சு அளவு சாறு எடுத்து இரவு வரும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர கடுமையான காசநோய் குணமாகும். மூச்சுத்திணறல் குணமாக: ஆடாதோடை (Pavettaindica), சர்க்கரை (Sugar), பாட்டிவைத்தியம் (naturecure), மிளகு (Pepper), வெள்ளெருக்கம்பூ (Calotropisproceraflower), வெள்ளெருக்கு (calotropisprocera) காம்புகள் நீக்கிய வெள்ளெருக்கம் மலரையும், மிளகு தூளையும் சம அளவு எடுத்து தேவையான அளவு வெள்ளெருக்கின் சாறு விட்டு நன்கு அரைத்து 200 மிலி கிராம் மாதிரிகளாக உருட்டி நிழலில் உலர்த்தவும். ஆடாதொடையை வேக வைத்து தயாரித்த கஷாயத்துடன் 2 மாத்திரைகளை சேர்த்து அத்துடன் சிறிது இனிப்பையும் சேர்த்து அருந்திவர மூச்சு திணறல் கட்டுப்படும். இரைப்பு குணமாக: இரைப்பு (Hissing), எருக்கன் (Calotropisgigantea), எருக்கன்பூ (Calotropisgiganteaflower), பாட்டிவைத்தியம் (naturecure), வெந்நீர் (hotwater), வெற்றிலை (Betelleaf) எருக்கன் மலரின் மையத்தில் அமைந்திருக்கும் நரம்பில் மூன்றை எடுத்து இதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயிலிட்டு மென்று விழுங்கி சிறிதளவு வெந்நீர் அருந்திவர இரைப்பு அகலும். தூதுவளை இலை, வேர், பூ, காய் ஆகியவற்றை கொதிக்க வைத்து கஷாயம் செய்து பாலில் சாப்பிட்டு வந்தால் இரைப்பு குணமாகும். இளைப்பு குணமாக ஆஸ்துமா குணமாக: 1. கிராம்பு, மிளகு, எருக்கன்பூ இவைகளை சம அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து அரைத்த விழுதை மிளகளவு உருண்டைகளாக செய்து வேளைக்கு 2 வீதம் தினமும் 3 வேளை உண்டுவர ஆஸ்துமா நோய் அகலும். 2. வில்வஇலையுடன் மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும். 3. பிரம்மத்தண்டு சமூல சாம்பல் 3 அரிசி எடை அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடவும் இதனால் ஆஸ்மா குணமாகும். 4. கொன்றைப்பட்டையுடன்,தூதுவளைப் பொடி சம அளவு எடுத்து அரைகரண்டி தேனில் கலந்து சாப்பிடவும். இளைப்பு: விளாஇலை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இளைப்பு குணமாகும். ஜன்னி இழுப்பு குணமாக: சங்கிலை மற்றும் வேப்பிலை சம அளவு எடுத்து கசாயம் செய்து குடிக்க சன்னி இழுப்பு வராமல் தடுக்கலாம்.