logo
home பலன்கள் ஜூலை 06, 2016
குழந்தைகளுக்கு ஏற்படும் திருஷ்டியை கழிக்க எளிமையான வழிமுறைகள்
article image

நிறம்

குழந்தைகள் பேச்சும், நடையும், சிரிப்பும், அவர்கள் செய்யும் செயலில் மயங்காதவர்கள் யாருமல்ல, இந்த வகையில் குழந்தையின் நடவடிக்கைகளை ரசிக்கும் போது, பலரின் கண்திருஷ்டி அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட திருஷ்டியை கழிக்க வீடுகளில் நம் முன்னோர்கள் பல்வேறு திருஷ்டிகழிக்கும் செயலை இரவு நேரத்தில் செய்தனர். 
சாப்பிடும் உணவை பயன்பிடுத்தி திருஷ்டி கழிக்கும் முறை, கல் உப்பை பயன்படுத்தி திருஷ்டி கழித்தல், மண்ணைப் பயன்படுத்தி திருஷ்டி கழித்தல்.... போன்ற பல்வேறு முறைகள் கையாளப்பட்டது. இவற்றில் கூடுதலாக இன்னும் சிறப்பாக குழந்தைகளின் திருஷ்டியை கழிக்கும் முறையை பார்ப்போம்.

செப்பு காசு கட்டினால் :
குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும் அண்டாது. சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது. இப்படி செய்வதினால் சக்திதேவியின் ஆசியால் இன்னும் அந்த செம்பு காசுக்கு சக்தி கூடுமே தவிர குறையாது.

செங்கல்லின் மகிமை:
குழந்தைகள் அடிகடி கீழே விழுந்துக் கொண்டே இருந்தால், செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.