logo
home தத்துவம் ஏப்ரல் 02, 2018
திருப்தி ஏற்பட்டுவிட்டால் வெறுப்பு போய்விடும்
article image

நிறம்

15 நாட்களுக்கு ஒரு முறை செய்வது ‘பட்ச வழிபாடு’, சிறப்பு வாய்ந்தது. ஏதாவது ஒரு பட்சத்திலாவது ஆண்டவனை பிரதோஷ கால வழிபாட்டில் நினைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அமாவாசை&ஒரு பட்சம். பௌர்ணமி ஒரு பட்சம். இந்த ஒரு பட்ச காலத்தில் கடவுளின் ஒரு நினைவு வலிமை வாய்ந்தது. நாளும் இறைவனை எண்ணுங்கள்! தினமும் ஆண்டவனை சிறிதளவு நினைக்க தயாராக இருக்கிறீர்கள். ஆனால், அப்படி நினைப்பது எப்படி என்று தெரியவில்லை. எப்படி நினைப்பது? என்ற சிறிய உணர்வு தெரிந்துவிட்டால், ‘அனுக்கிரகம்’ என்ற அருள் கிடைத்துவிடும் என்பதை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான், ஆண்டவன் பாடல்களை விவரமாக ஆராய்சிக்குரியதாக பாடிக்கொண்டே போகிறான்? இறங்க முடியாததில் இறங்கலாம்; ஏற முடியாததில் ஏறலாம்; உயரப் பறக்கலாம் & இவை அதிகமாக மனிதன் எண்ணுகிற எண்ணம். தமிழிலே ‘அருள்’ & அனுக்கிரகபூதன். எங்கு சென்றாலும், ஏதாவது ஒரு பொருள் கிடைத்தால் அனுக்கிரகம். நம்மிடத்திலிருந்தோ, நாம் செல்கின்ற இடத்திலிருந்தோ கருத்து பிறந்தால் & திருப்தி, இதுதான் இறைவனை நினைக்கின்ற வேலையைச் செய்கிறது. திருப்தி ஏற்பட்டுவிட்டால், அந்த நிமிடத்தில் அனுக்கிரகம் உயிர் நாடிக்கொண்டு இருக்கிறது. என்ன பலன்? வெறுப்பு போய்விடும். வெறுப்பு நம்மிடத்திலேயே நமக்கு வராது. அது அகன்று விடுதல் வேண்டும். இந்த நிலை ஏற்பட்டுவிட்டால், பிரதோஷம் நீங்கிவிட்டது (என்று பொருள்). பாபம் என்றால் பயப்படாதீர்கள். ஏன்? என்னிடத்தில் திருப்தி ஏற்படவில்லை, கால்/கை, பஞ்ச இந்திரியங்களில் திருப்தி வேண்டும். சிந்தனையில், வாழ்க்கையில் திருப்தி வேண்டும். குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடும் வாழ்க்கை என்பது பெரிய விளையாட்டு. மனிதன் கடைசி வரை விளையாட வேண்டும். குழந்தை கண் முன் விளையாடுகிறது. வாழ்க்கை ஒரு விளையாட்டு என்று எண்ணி விளையாடு! எது கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்! பூஜ்ய ஸ்ரீ ஞானச்சேரி ஞானிகள், தொடர்புக்கு: 09841028028