logo
home தத்துவம் அக்டோபர் 08, 2016
காசு உள்ளவரைத்தான் கடவுள் பார்க்கிறாரா? மனிதனுக்கு உணர்த்தும் கடவுளின் அற்புதமான கேள்வி?
article image

நிறம்

நறுக்கென்று என்னுள் தோன்றியது ஒரு கேள்வி.....
"காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்..... காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......!!!  இது என்ன நியாயம்.....??? " என்றேன்.
கலகலவென சிரித்தான் இறைவன்
"தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;
தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;
ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;
எனக்கான இடத்தை, எனக்கான நேரத்தை, எனக்கான விழாக்களை, என்னை வணங்கும் முறையை எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!!!
இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம்.....???" என்றான் இறைவன்.....!!!
சரிதானே.......!!!
நம்முடைய வசதிக்கு ஏற்றார்போல் ஒவ்வொன்றும் மாற்றியமைத்துக் கொண்டு.......
குறையை மட்டும் கடவுளின் மேல் சுமத்தினால் கடவுள் எழுந்து வந்து பேசப்போவதில்லை என்ற துணிச்சல் தானே.....!!!
- படித்ததில் பிடித்தது

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 



நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை 
aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.