logo
home தத்துவம் ஜூலை 21, 2016
எல்லோரும் நலம் பெற்று வாழ இறையருளை இறைஞ்சி நிற்போம்
article image

நிறம்

நலமா !
என்று ஒருத்தர நாம் கேக்கறோம்னு வச்சுக்கோங்க, பதில்   ‘நலம் தான்’ அப்படின்னு வந்துட்டா ok .  
இல்லேன்னா அவங்க நலத்த நாம் ஏண்டா கேட்டோம்னு ஆயிடும்.         
சரி இப்ப ஒரு விஷயத்த பார்ப்போம்.     
Hi da! how are u da!  ன்னு நாம ஒருத்தர கேக்கணும்னா நாம நல்லா இருந்தா தானே?    
"நமக்கே சுத்தம் இல்லாதவன் வீட்டு கூரை மேல உள்ள ஒட்டடை போல ஆயிரம் தொங்குதே"     
இதுல எங்க அடுத்தவங்கள விசாரிக்கிறது?          
முதல்ல உங்க நலத்தப் பாருங்க    ஊர் நலத்த அப்புறம் பார்ப்போம்.     
உடனே "இப்படியெல்லாம் நாம சுயநலமா இருக்கிறதாலத்தான் நம் நாடு இந்த கெதிக்கு ஆளாயிடுச்சி - ன்னு "இந்த நாட்டின் பாதுகாவலர் மாதிரி பேச ஆரம்பிச்சிடாதீங்க .
நடிப்பு வேண்டவே வேண்டாம். நம்ம அசல் தான் எப்பவும் நம்மை இந்த உலகத்துக்கு காட்டிக் கொடுக்கும்.       
உங்க நலத்த முதல்ல பாருங்கன்னு ஏன் சொல்லனும் ?    
ஏன்னா நீங்களே உங்க நலத்தில அக்கற எடுத்துககல.          
உடம்ப ஆரோக்கியமா வச்சுக்கத் தெரியல, மனச நிம்மதியா வச்சுக்கத் தெரியல, ஆனந்த வாழ்க்கை வாழ  வழி என்னன்னு தெரிஞ்சுக்கல, ஊழ்வினையால வர்ற துன்பத்த எப்படி போக்கறதுன்னு தெரிஞ்சுககல,   இப்படி பல விஷயங்கள் நமக்கு பல துன்பங்கள தரும் போது நாம எப்படி அடுத்தவங்கள விசாரிக்கறது?        
விசாரிக்கணும் எப்போ?           
உடம்பு ஆரோக்கியத்துக்கு தியானம், யோகம் என்றும், மன நிம்மதிக்கு ஆலயம், தரிசனம் என்றும்,       ஆனந்த வாழ்க்கைக்கு நல்ல வேலை. நல்ல சொற்பொழிவுகள் என்றும் , ஊழ்வினை துன்பத்துக்கு தர்மம், சேவை என்றும்உங்கள நீங்களே சரி செய்து கொண்ட பிறகு இந்த உலகையே நீங்க விசாரிக்கலாம் , வழியும் சொல்லலாம்.   
நாம் அடுத்தவருக்கு வழிகாட்ட முயல்வதற்காகவாவது நமக்கு முதலில் வழி தெரியட்டுமே .          எல்லோரும் நலம் பெற்று வாழ இறையருளை இறைஞ்சி நிற்போம். 
– Thali ‪+ 91 96009 99279





குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                                            
www. aanmeegamalar.com 
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com