logo
home தத்துவம் பிப்ரவரி 20, 2016
பிறரை நாம் நேசிக்காமல் நம்மை மட்டும் பிறர் நேசிக்க வேண்டும் என்று கோருவது இயற்கைக்கு புறம்பானதாகும்: அரவிந்தர்
article image

நிறம்

அஞ்சாமையிலும் ஆளும் திறமையிலும் சிங்கம் போல வாழுங்கள். பொறுமையிலும் சேவையிலும் ஒட்டகம் போன்றிருங்கள். தாய் போன்று நன்மை செய்வதிலும் அமைதி காப்பாதிலும் சகிப்புத் தன்மையிலும் பசுவைப் போலிருங்கள். கண்ணுக்கு தெரிகின்ற பொறி புலன்களுக்கு எட்டுகின்ற புறவுலகிற்கு அப்பால் யாரால் செல்ல முடிகிறதோ அவர்களால் மட்டுமே உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் இதுவரைக்கும் பெற்றிருக்கும் அறிவினை வாழ்வில் வெளிப்படுத்தி உங்களை அறிவுமயமாய் ஆக்கிவிடுங்கள். அப்போது உங்களுக்குள் உறையும் அறிவுமயமான இறைவனையும் காணும் பேறு பெறுவீர்கள். வள்ளல் என்று எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று தர்மம் செய்வது கூடாது. நாம் யாருக்கு உதவுகி றோமோ அவர்கள் மீது அன்புக் காட்டுங்கள். அவருக்கு உதவும் வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கு நன்றி கூறுங்கள். ஓர் எறும்பின் உயிரைக் காப்பது என்பது ஒரு பேரரசை நிறுவுவதைக் காட்டிலும் சிறந்த செய லாகும். எல்லா உயிர்களும் கடவுளால் படைக்கப் பட்டவையே. அவற்றைக் காக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. உலகில் இருப்பதால் மட்டுமே பயனில்லை. நல்ல லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு அதற்காக வாழவேண்டும். நம்மால் முடிந்த நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் நாம் மனிதனாகப் பிறந்திருக்கிறோம். சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்துவிடக் கூடாது. அதை விலக்க முற்பட வேண்டும். பிறரை நாம் நேசிக்காமல் நம்மை மட்டும் பிறர் நேசிக்க வேண்டும் என்று கோருவது இயற்கைக்கு புறம்பானதாகும். நீ எவரையாவது ஏளனம் செய்யும்போது உன் உள்ளத்தை உற்று நோக்கு. உன் மடமையைக் கண்டு சிரிக்கத் தோன்றும். இறைவனின் மாவீரனாக உன்னை எண்ணிக் கொள். அப்போதுதான் உன்னால் முழுமுயற்சி யோடு உலகில் போராட முடியும். பிறர் தீயதென்று சொல்வதை நீங்களும் தீயதென்று தள்ளாதீர்கள். கடவுள் எதை வேண்டாம் என்று தள்ளியிருக்கிறாரோ அதை நீங்கள் அகற்றுங்கள். உன் ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு செயலும் உனக்குள் இருக்கும் கடவுளுக்கு நீ அளிக்கும் காணிக்கையாகட்டும். நமது விவேகமுள்ள மிகவும் சிறந்த நண்பன் இறைவன் மட்டும் தான். ஏனென்றால் நம்மை எப் போது அடிக்க வேண்டும், எப்போது அரவணைக்க வேண்டும் என்பதை அவன் நன்கு அறிவான். மனிதர்களை நேசி. அவர்களுக்கு தொண்டு செய். ஆனால் அவர்களின் பாராட்டுதலுக்கு ஆசைப் படாமல் இருப்பதில் கவனமாக இரு. உத்தமச் செயல்களைச் செய்ய நினைப்பவர்கள் அதை உடனடியாக செய்து விடவேண்டும். உன்னை ஒருவன் அடிக்கும்போது அவனிடம் தெய்வத் தைக் கண்டால் நீ பரம ஞானியாகி விட்டதாக பொருள். உன்னை தூய்மையாக்கும் பொறுப்பை நீ கடவுளிடம் ஒப்படைத்தால் அவர் உன்னிடம் இருக்கும் தீயவற்றை உனக்குள் இருந்தே அகற்றிவிடுவார். இறைவன் தந்த மாவீரனே! துன்பமும், அவமானமும் இனி இல்லை. மருத்துவர்களில் எல்லாம் சிறந்த மருத்துவன் நமக்கு துணையாய் இருக்கிறான் என்பதையும் மறவாதே. அகந்தையாலும் அஞ்ஞானத்தாலும் எழும் கீழான எண்ணங்களை அறவே ஒழித்துவிட்டால் ஆண்ட வனின் திருக்காட்சியை உள்ளத்தில் காண முடியும்.