logo
home தத்துவம் ஜனவரி 24, 2016
வாழ்க்கைக்கு உகந்த புத்தரின் அற்புத வாக்கு
article image

நிறம்

வாய்மையை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் அதில் நம்பிக்கை கொள்ளுங்கள். அதன் இனிமை கசப்பானது என்று கருதினால் துவக்கத்தில் அதைக் கண்டு தயங்கினாலும் வாய்மையை உறுதியாக நம்புங்கள். வயல்களுக்குத் தீமை களைகள். சமுதாயத்துக்கு தீமை ஆசைகள். எனவே ஆசையில்லாதவர்களுக்குச் செய்யும் உதவி பெரும் பயனை ஏற்படுத்தும். அறியாமையுடன், அடக்கம் இல்லாமல் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, ஞானத்தோடு தியானம் புரிந்து வரும் ஒருவன் ஒரு நாள் மட்டும் வாழ்வதே மேலானது. எந்தக்காலத்திலும் பகை என்பது பகைமையினால் நீங்கி விடுவது இல்லை. பகையைத் தீர்த்து வைக்க அன்பு ஒன்றால் மட்டுமே முடியும். பொற்காசுகளை மழையாகப் பொழிந்தாலும் ஆசைகள் அடங்காமல் பெருகும். ஆசைகளின்படி அனுபவித்தல் அற்ப இன்பம் என்றும் பின்விளைவு துக்கமென்றும் அறிந்தவன் ஞானியாவான். தன்னுடைய பகைவனால் ஏற்படும் தீமைகளை விட அடக்கம் இல்லாத மனமே ஒருவனுக்கு அதிகமான தீமைகளை ஏற்படுத்துகிறது. நன்றாக வேயப்படாத கூரை வீட்டில் மழைநீர் புகுந்து விடுவது போல புண்படுத்தப்படாத மனதில் ஆசைகள் புகுந்துவிடும். ஆசையைப் போன்ற நெருப்பு வேறு எதுவும் இல்லை. இத„ல் உந்தப்பட்ட மனிதர்கள் வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப் போல ஓடுகின்றனர். உண்மையை பேசுங்கள். கேட்பவர்களுக்கு இயன்றதைக் கொடுப்பது போன்ற நல்ல செயல்களைச் செய்யுங்கள். இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் சன்னதியை அடையலாம். செயலில் காட்டாமல் ஒருவன் தன்னுடைய வாயால் தேன் ஓழுக பேசுவதால், அழகும் நிறமும் அமையப் பெற்ற மலர், வாசனை இழந்து காணப்படுவது போல் பயனற்றதாகும். கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும். தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கஞ்சனை கொடையால் வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். தாயையும் தந்தையும் ஆதரித்தல், மனைவியையும் குழந்தைகளையும் போற்றுதல், அமைதியாக இருத்தல்... இதுதான் வாழ்வின் பெரும் பாக்கியம்.