logo
home ஆன்மீகம் பிப்ரவரி 03, 2018
ஆன்மிகத்தை வழிபாட்டில் துவங்க வேண்டும், எடுத்ததும் வேதாந்தத்தில் துவங்க கூடாது?
article image

நிறம்

கார் ஒட்டச் சொன்னால் காரை முன் நோக்கி ஓட்ட வேண்டும். எடுத்ததும் பின்னோக்கி ஓட்டினால் காரின் நிலை? கார் ஓட்டப் பழகியதும் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும். உரிமம் இல்லாதவனாய் நீண்ட நாள் பயணிக்க முடியாது. ஆன்மிகத்தை வழிபாட்டில் துவங்க வேண்டும். எடுத்ததும் வேதாந்தத்தில் துவங்க கூடாது. துவக்கமே வேதாந்தமாய் இருக்க ஒரு சிலருக்கு வாய்ப்பு இருந் திருக்கலாம். எல்லோரும் அதையே பாதையாக்கி விடக் கூடாது. தொண்டன், சேவகன் எனும் உரிமைப் பெற்றிருத் தல் அவசியம். ஏதுமற்றவனாய் கை வீசி நடக்கும் MD -க்கள் ஆரம்ப காலத்தில் தேவையில்லை. (என்றுமே தேவையில்லை). உரிமம் பெற்ற ஓட்டுனரை நம்பி பயணிகள் பயமின்றி பயணிப்பது போல் நல்லதொரு வழி காட்டியை நம்பி ஏனைய மக்களும் பக்தர்களாக பயணிக்கலாம். காருக்கென்று தனிப் பாதை கிடையாது ஓட்டுபவரை பொறுத்தே பாதையும், பயணமும் அமையும் என்பது போல் ஆன்மீகத்திற்கென்று தனிப்பாதை கிடையாது. செல்பவர்களைப் பொறுத்தே எல்லாம். எல்லாம் சரியாக இருந் தும் தர வேண்டிய லஞ்சம் சிலருக்குத் தந்தே தீர வேண்டும் என்பதாய் மக்கள் சரியானப் பாதையில் சென்றாலும் துன்பம் கொஞ்சம் வந்தே தீரும். எல்லாம் சகஜம் தான் சகஜமாக்கிக் கொண்டால். Thali, Ph:09786223577