logo
home ஆன்மீகம் பிப்ரவரி 03, 2018
உணர்வற்ற முறையில் உடலில் பூசப்படும் திருநீறும், திருமண்ணும்?
article image

நிறம்

இறைவன் தன்னை மறைத்துக் கொள்ள விரும்பாதவன் என்பதால் தான் நாம் அவனை உணர விருப்பம் கொள்கிறோம். நாம் உணர விருப்பம் கொள்வதால் மட்டும் நம் உணர்வாய் அவன் பிரதிபலிப்பதில்லை. உணரக்கூடியவர் யாரோ அவர் உணர் வின் மெல்லிய நாதத்தில் தன்னை கரைத்துக் கொள்ளகூடியவராய் இருத்தல் அவசியம். மென்மை இயல்பாய் அமைவது என்பது துர்லபம். இயல்பை அமைத்துக் கொள்ளுதல் என்பது மிகவும் எளிதான விஷயம். ஆனால் நீடிக்காது என்பதால் உணர்வற்ற வேஷம் மட்டுமே நமது இறையுணர்வாய் நம்மில் பிரதி பலிக்கும். உணர்வற்ற திருநீறும், திருமண்ணும் நம் உடலில் எந்த மூலையில் பூசப்பட்டாலும் அதனால் ஆவப்போவது என்ன?.. ஆலயத்திற்குள் நுழையும் போது மூன்று விரல் அளவும், அலுவலகத்திற்குள் நுழையும் போது ஒரு விரலின் நுனியளவுமாய் மாறிப் போவதில் உணர்வு எங்கே வாழும்?. உலகியலின் உணர்வு கால சூழ்நிலைக் கேற்ப மாறும். ஆனால் இறையுணர்வு என்பது கால சூழ்நிலை அறியாதது. மென்மை அடிக்கடி தம்மை மாற்றிக் கொள்ள விரும்பாது. அதுவே மென்மையின் அடிநாதம். நாதம் மாறுபடுவதில்லை நாதத்தினை விரும்புபவனே மாறுபடுகிறான். வன்மையோடிருக்கும் நாம் மென்மையாக இருப்பது போல் வேஷமிடாமல் இருந்தாலே மென்மை நம்மில் குடியேறும். எது வேஷம் என்று புரியவில் லையோ? போகட்டும் விடுங்கள். Thali, Ph:09786223577