logo
home ஆன்மீகம் டிசம்பர் 17, 2017
தோஷங்களை தீர்க்கு அற்புதமான மார்கழி மாதத்தின் சிறப்புகள்
article image

நிறம்

தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற் றப்படுகிறது. மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப் பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங் களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும். திருவெம்பாவை விரத காலத்தில் சை வர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக் கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர். இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இம் மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள். இம்மாதம் ஆண்டாளுக்கு முக்கியத்துவம் தரப் படும் மாதமாக போற்றப்படுகிறது. மனிதர்களுக்கு ஒரு நாள், 60 நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்). பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை. மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும். ஒரு நாளின் முக்கியமான பாகம் வைகறைப் பொழுது என்றால் அது மிகையாகாது. புராண நிகழ்வுகள்: இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்கழியில் தான் இறைவனை அதிகமாக வழிபடும் நிகழ்ச் சிகள் வருகின்றன. மார்கழி மாதத்தில் பல்வேறு புராண நிகழ்வுகள் நடந்துள்ளது. மகாபார யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்ற தாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான். இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக் கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலை யை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக் களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத் தில்தான். மேலும் ஆண்டாள் நாள்தோறும் வைகறை யில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதத்தில்தான். இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம். தேவர்களின் அதிகாலைப்பொழுதாகவும், தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த நேரமாகவும் விளங்கும் மார்கழி மாதத்தில்தான் சிதம்பரம் நடராஜர் ஐந்தொழில்களையும் புரிகின்றார். என்று புராணங்கள் கூறுகின்றன. தோஷங்களை தீர்க்கு மாதம்: மார்கழி மாதத்தில் விரதமும், செல்வம் தரும் நோன்பு இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறலாம். இந்த மாதத்தில் இருக்கும் நோன்பு, விரதங் களின் பலன் மிகவும் சக்தி வாய்ந் ததாக விளங்கும், திரு மணத்தடை நீங் கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும், இதனால்தான் மார்கழி மாத நோன்பு, மிகவும் சிறந் தது என்று முன்னோர்கள் வரை யறுத்துள்ளனர். இந்த மாதத்தில் நோன்பும் விரதமும் இருக்க முடியாத சூழ் நிலையில் இருப்பவர்கள் மார்கழி அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து விடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திரு வெம்பாவை பாடல்களைப் பாடினாலே அபரிமிதமான பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. கோலமிடும் வீட்டில் மகாலட்சுமி வாசம்: மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலா னோர் மார்கழி மாதத்தில் கோல மிடுகின்றனர். நோய் தீர்க்கும் மாதம்: மார்கழியில் காலையில் எழுந்து வெளியே நடந்தால் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு தீர்வுகிடைக்கும் என்று முன்னோர் கண்டுபிடித்த காரணத்தால்தான், அதிகாலை பொழுதில் பஜனைபோன்றவற்றை பாடியவாறு, தெருமுழுக்க மக்கள் கூட்டம் கூட்ட மாக வலம் வந்தனர். இவ்வாறு வலம்வரும்போது ஏற்படும் ஓசோன் வாயு நுரையீரலுக்கு சென்று புத்துணர்ச்சி தரும். மார்கழி மாத காற்று சருமத்திற்கும், வெள்ளை சிகப்பு உயிர் அணுக் களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத் திற்கும் மிகவும் நல்லது. இதை விஞ்ஞான பூர்வமான அறிவியல் ஆராய்ச்சியும் உண்மை என்று ஆராய்ந்துள்ளது. இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமந் நாராயணனின் கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பன்னிரெண்டு நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக விளங்கும் கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழி யாக விளங்குகிறது. ஆன்மிக மார்க்கத்திற்குச் செல்ல தலையான மாதமாகக் கருதப்படும் இம் மார்கழி மாதம் ‘‘மார்க சீர்ஷம்’’ என்பர். அதுவே நாளடைவில் மருவி மார்கழி என்றானது என்றும் கூறப்படுகிறது. சொர்கத்தில் இடம் தரும் பெருமாள்: மார்கழி மாதத்தில் வரு ஏகாதசி அன்று பட்டினி இருந்து, ஹரியின் நாமத்தை ஜெபித்து, நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஏகாதசி மகிமை, புருஷசூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்தால் அளவற்ற பயன்பெறலாம். ஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்ய வேண்டும். துவாதசியன்று நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மாதத்திற்கு இருமுறை வரும் எல்லா ஏகாதசிகளிலும்கூட விரதம் இருக்கலாம். முடியாவிடில் மார்கழி வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் மகாவிஷ்ணு மகிழ்வுடன் சொர்க்கத்தில் இடம் தருவார். இவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறை வேறும். பாவம் விலகும். மறுமையில் சொர்க்கம் கிட்டும். எட்டு வயது முதல் 80 வயது வரை இவ்விரதத்தை ஆண் பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம். வைகுண்ட ஏகாதசி விரதத் தை அனுஷ்டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங்களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும்; மோட்ச ஏகாதசி என்றும்; பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு. பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங் கியதால் நஞ்சுண்ட ஏகாதசி என்றும் கூறுவர். மார்கழி பாராயணம்: மார்கழியில், தினமும் பாடும் பக்திப் பாடல்களுடன் திருப்பாவை, திருவெம்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி எழுச்சி, மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோயில்களிலும் பாராயணம் செய்கின்றனர். குறிப்பாக மார்கழியில், சிறப்பாக பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு. வைணவக் கோயில்கள் சிலவற்றில் மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர் சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமான விஷேசங்களுள் ஓன்றாக போற்றப்படுகிறது. தெய்வீக மாதமான இந்த மாதத்தில் நாமும் இறை சிந்தனையுடன் ஆன்மிக பாதையில் சென்று ஆன்மிகமலராகத் திகழ்வோம்.