logo
home ஆசிரியர்-பக்கம் ஜனவரி 23, 2016
ஆன்மிகமலர்.காம் இ-மெயில் புக் இலவச சேவை எங்களுடன் நீங்களும் இணையுங்கள்...
article image

Color
Share

ஆன்மிகமலர்.காம் மூலம் ஆன்மிக சேவையில் ஈடுபட்டிருக்கும் எங்களது அடுத்த கட்ட முயற்சி, நமது இணையதளம் சார்பாக மாதம் இரண்டுமுறை “ஆன்மிகமலர்.காம் மெயில் புக்” என்ற சேவையை துவக்கியிருப்பது. இந்த மாதமிருமுறை இதழ் துவக்கியதிலிருந்து ஆன்மிக அன்பர்களிடமிருந்து மிகுந்த உற்சாகமான வரவேற்பும், அருமையான வடிவமைப்பு, அற்புதமான செய்திகள் என்று வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஆன்மீக கருத்துக்களையும், அன்பர்களுக்கு தெரியாத செய்திகளை, எளிதான பரிகாரங்களை எளிமையாக தெரியப்படுத்துவதுதான் நமது நோக்கம். இந்த நோக்கம் உள்ள அன்பர்கள் யார் வேண்டுமானாலும் எங்களுடன் இணையலாம்.

நமது இந்த சேவையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மக்களுக்கு அதிகம் பயன்படும், சிவபுராணம், கந்தசஷ்டி கவசம், மகான்களின் கருத்துகள், சஹஸ்ரநாமம்... போன்ற பல்வேறு பயனுள்ள பொக்கிஷங்களை, அழகிய வடிவமைப்பில், தற்போதைய காலகட்டத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப செல்போன், டேப், லேப்டாப், கணிப்பொறி போன்றவற்றில் படிக்கும் விதமாக இ-சேவை வடிவத்தில் தயாரிக்க தீர்மானித்துள்ளோம்.

இதற்கு பல்வேறு வகையில் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது, அதனால் இந்த சேவை துவங்க கால தாமதம் ஆகும். இருந்தாலும் வெற்றிகரமாக இந்த சேவையை செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம். வாசகர்களாகிய நீங்களும், எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

மேலும் இமெயில் புத்தகத்தின் வளர்ச்சி தற்போது 6,000த்தை தாண்டியுள்ளது இச்சேவையை இன்னும் அதிகப்படுத்த முயற்சி செய்கிறோம். ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ள அன்பர்கள் நமது மெயில் புத்தக வாசகர்கள் ஒவ்வொருவரும், தங்களது உறவினர்களுக்கும் இந்த புத்தகத்தை அனுப்பி வைத்து அவர்களுக்கும் நமது சேவையை தெரியப்படுத்துங்கள்.

ஒவ்வொரு வாசகர்களும் குறைந்தது 4 நண்பர்களுக்காவது நமது மெயில் புத்தகத்தை அனுப்பிவைக்க வேண்டும் என்று அன்பு கட்டளையாக தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

ஆன்மிகத்தில் நாட்டமுள்ள அன்பர்கள் தாங்கள் செல்லும் கோயில், தெரிந்த மகான்கள், அவர்களின் சொற்பொழிவுகள், சித்தர்கள், பெரியவர்களின் அறிவுரைகள் போன்றவற்றை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினால், அவற்றை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

இந்து மதத்தில் உள்ள கருத்துக்களும், வழிமுறைகளும் பல்வேறு காரணத்தால் மறைக்கப்பட்டுவிட்டது. அதை தெரிந்த அன்பர்கள், தயவு செய்து தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதை எடுத்துச் சொல்ல நமது இதழை பயன்படுத்துங்கள்.

நமது இதழின் மூலம் பல ஆயிரம் வாசகர் படித்து பயன்பெறவும், மறையும் கருத்துக்கள் புதிதாக முளைத்து வளர நீங்கள் ஒரு காரணமாக இருப்பீர்கள். பயன்படும் கருத்துக்களை, பயன்படாமலிருக்க நாம் காரணமாக இருந்தால், அதுவும் ஒரு வகையில் பாவச் செயல்தான்.

நமது “ஆன்மிகமலர்.காம் மெயில் புக்” பெற விருப்பமுள்ள அன்பர்கள் தங்களது இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலும்  whatsapp 7299992699 என்ற வாட்சப் எண்ணிலும் அனுப்பி வையுங்கள். மாதம் தோறும் வெளிவரும் இரண்டு இதழ்கள் தங்களது இ-மெயில் முகவரிக்கு இலவசமாக அனுப்பிவைக்கிறோம்.

இந்து மதத்தில் இல்லாத கருத்துக்களே இல்லை... மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை தேவையான அனைத்து வழிமுறைகளும்.... நல்வாழ்விற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும்.... கால மாற்றத்திற்கேற்ப பயன்படும் பல்வேறு செயல்முறைகளும் தற்போது பல்வேறு காரணங்களால் மெல்ல மறைகிறது.

வேப்பமரக் குச்சியும், கரித்தூளும் பற்களுக்கு உறுதி, என்பதை அறிந்த நமது முன்னோர்கள், அவற்றை பயன்படுத்தும் விதத்தை மிக அழகாக எடுத்துச் சொல்லி, அதை மக்களும் பயன்படுத்தி வந்த சமயத்தில், பல்வேறு பற்பசைகள் அதை கேலியும் கிண்டலும் செய்து, மக்களின் மனதில் தேவையற்ற மாற்றத்தை ஏற்படுத்தின, ஆனால் கடைசயிலி தற்போது அதே வேப்பங்குச்சியையும், கரித்தூளையும் தங்களது பற்பசையில் பயன்படுத்துவதாக விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன.

இதைப் போன்றுதான் நமது நல்ல அரிய கருத்துக்கள், தற்போது தேவையற்ற பொய்யான சாயங்கள் பூசப்பட்டு மறைக்கப்படுகின்றன. அவை சிறிது காலம் கழித்து, வெளிநாட்டுக்காரர்களால் புதுப்பிக்கப்பட்ட கருத்துக்களாக மாறி, மீண்டும் நமக்கே வந்து சேரும் அவல நிலையை முடிந்த அளவு நாம் தடுத்து நிறுத்துவோம். நல்ல கருத்துக்களை நமது சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லி, நமது இந்து மதத்தின் பெருமையை கட்டிக் காக்க நாம் நல்ல முயற்சி செய்வோம், மற்றவருக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக நாம் மாறுவோம்.

C.NAGARAJAN

aanmeegamalar@gmail.com

Whatsapp No.7299992699

cell No. 8939499598